சுதந்திர தினத்தின் 79வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நாளை இந்தியா முழுவதும் சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர். மனிஷ் நாரணவரே தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.சுதந்திர தின நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் வெகு விமர்சையாக செய்து வருகிறது. இதில் காவல் துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.யாதவ் க்ரிஷ் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து காவல்துறையினருக்கு அனைவருக்கும் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறையினர் மிடுக்கான உடை அணிந்து கலந்து கொண்டனர்.