Sakkraviyugam

September 11, 2026

சென்னை மக்களே.. நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்!

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி நாளை (ஆகஸ்ட் 15) ஞாயிறு அட்டவணைப்படி சென்னை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல் கட்டமாக, 54 கி.மீ தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பணிகள் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Scroll to Top