தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நடத்தும் நலம் காக்கும் ஸ்டாலின் பல துறை உயர் சிறப்பு மருத்துவ முகாம் வரும் 30 9 2025 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற உள்ளது.
சிகிச்சை அளிக்கப்படும் நோய்கள் மற்றும் இலவச பரிசோதனைகள்
இருதய நோய் சிகிச்சை, பொது மருத்துவ சிகிச்சை, கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பிரிவு, தொற்றுநோய் சிகிச்சை பிரிவு, எலும்பு மூட்டு பிரிவு, பல் மருத்துவ பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, மனநலப்பிரிவு, கண் மருத்துவப் பிரிவு, காசநோய் பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, நுரையீரல் நோய் சிகிச்சை பிரிவு
முகாமில் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களால் பரிசோதனை செய்து சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும்,
தேவைப்படும் நோயாளிகளுக்கு தலைமை மருத்துவமனையில் தொடர் சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப்படும்
குறிப்பு: 1. மருத்துவ முகாமிற்கு வருபவர்களுக்கு கட்டாயம் ஆதார் கார்டு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எடுத்து வரவும்,
2. தொழிலாளர் நலய அட்டை பெறுவதற்கு ஆதார் அட்டை அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி குடும்ப அட்டை மற்றும் வருமான சான்றிதழ் எடுத்து வரவும்
3. மருத்துவ முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பதிவு செய்யப்படுகிறது
இவ்வாறாக வட்டார மருத்துவ அலுவலர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சேவூர், மாவட்ட சுகாதார அலுவலர் திருப்பூர்,மாவட்ட ஆட்சித் தலைவர் திருப்பூர் ஆகியோர் இதனை அறிவிப்பு செய்துள்ளனர்.