Sakkraviyugam

April 16, 2026

காலாண்டு விடுமுறை இந்த வருடமும் இல்லையா? காற்றில் பறக்கும் பள்ளிக் கல்வித் துறையின் அதிரடி உத்தரவு!

திருப்பூர், செப்டம்பர் 29:

தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவித்துள்ளது. இது மாணவர்களின் ஓய்வையும், பெற்றோரின் திட்டமிடலையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கையாகும். ஆனால், சில தனியார் பள்ளிகள் இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசு உத்தரவு என்ன?


தமிழக பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்ட உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளும் குறிப்பிட்ட தேதியில் இருந்து காலாண்டு விடுமுறைக்கு செல்ல வேண்டும். இது மாணவர்களின் மனச்சாந்திக்காகவும், ஆசிரியர்களின் திட்டமிடலுக்காகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.

மீறினால் என்ன நடவடிக்கை?


தனியார் பள்ளிகள் இந்த உத்தரவை புறக்கணித்தால், பள்ளிக் கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுக்கலாம்.

  • பள்ளியின் அங்கீகாரத்தை மீளாய்வு செய்யவேண்டும்
    அல்லது நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் எடுக்கலாம். பெற்றோர் புகார் அளித்தால் பெற்றோர்களை பள்ளி நிர்வாகத்திடம் காட்டிக் கொடுக்காமல் புகாரின் அடிப்படையில் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும்.

பெற்றோர்களின் சிரமங்கள்:

  • விடுமுறை திட்டமிடல் குழப்பமாகிறது
  • குழந்தைகள் ஓய்வின்றி பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை.
  • மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு குறித்து கவலைப்பட வேண்டியதாகிறது.
  • அனைத்து மாணவர்களும் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பப்படுவதால், நாங்களும் தங்களது குழந்தைகளை சிறப்பு வகுப்புகளுக்கு பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறோம் என்றும் பெற்றோர்கள் கருதுகின்றனர்.

மாணவர்களின் மன ரீதியான சவால்கள்:

  • ஓய்வின்றி தொடர்ந்து பாடங்கள், தேர்வுகள்
  • குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாத நிலை
  • மனச்சாந்தி குறைவு, சோர்வு, ஆர்வக் குறைவு ஏற்படுகிறது.

ஆசிரியர்களும் அதிகப்படியான பணிச்சுமை மற்றும் ஓய்வில்லாததால் கண்டிப்பாக மாணவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளும் வாய்ப்பு மிக மிக குறைவு என்று மன நல நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

சமூகக் கோரிக்கை:


அனைத்து பள்ளிகளும் அரசு உத்தரவை மதித்து, மாணவர்களின் நலனை முன்னிலைப்படுத்த வேண்டும். பெற்றோர் , ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மன அழுத்தமின்றி கல்வியை அனுபவிக்க வேண்டிய சூழல் உருவாக வேண்டு்ம் என்பதே நம் அனைவரின் விருப்பமாகும். அவர்களை அந்த சூழ்நிலைக்கு உருவாக்க வேண்டியது அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

கல்வித்துறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை எந்த புகார் வரவில்லை பள்ளிகள் சரியாகத்தான் இயங்குகின்றன போன்ற ஏதாவது ஒரு ரெடிமேட் பதில்களை தருவார்கள் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் கள ஆய்வை மேற்கொண்டு சில பள்ளிகளை படம் பிடித்து இருக்கிறோம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை அடைகின்றனர்.

Scroll to Top