Sakkraviyugam

April 18, 2026

தமிழ் மொழிக்கு இடமில்லை – தமிழ் ஆர்வலர்களின் கவனத்திற்கு இந்த செய்தி சமர்ப்பணம்!

இந்திய ரயில்வேயின் ( IRCTC ) நுகர்வோர் ஹெல்ப்லைன் 14646 ல் – தமிழ் மொழிக்கு இடமில்லை!

இந்திய ரயில்வேயின் IRCTC வழங்கும் 14646 நுகர்வோர் ஹெல்ப்லைன் எண் இந்திய ரயில்வே பயணிகளுக்கான முக்கிய சேவையாகும். பயணிகள் தங்கள் புகார்கள், சந்தேகங்கள் மற்றும் சேவை குறைகளை தெரிவிக்க இந்த எண்ணை அழைக்கலாம். ஆனால், இந்த சேவையில் தமிழ் மொழி ஆதரவு இல்லை என்பது தமிழ்நாட்டு பயணிகளுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் இருந்து 25.09.2025 காலை 10.40 மணிக்கு இந்த எண்ணிற்கு அழைத்தவர்கள், “மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, ஹிந்தி, பங்காளி மற்றும் ஆங்கிலம்” ஆகிய மொழிகள் மட்டுமே வழங்கப்பட்டதாக தெரிவித்தார். தமிழ் மொழி எந்த இலக்கத்திலும் தெரிவிக்கப்படவில்லை.

இது தமிழ் பேசும் பயணிகளின் அடிப்படை உரிமையை மீறுகிறது. தமிழ்நாட்டில் தினசரி லட்சக்கணக்கான பயணிகள் ரயில்வேயைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு தாய்மொழியில் உதவி கிடைக்க வேண்டும் என்பது ஒரு நியாயமான எதிர்பார்ப்பு.

இந்த குறையை IRCTC மற்றும் ரயில்வே அமைச்சகத்திற்கு எழுப்பி, தமிழ் மொழி ஆதரவை உடனடியாக சேர்க்க வலியுறுத்துகின்றன.

மொழி அடையாளம் என்பது மக்கள் உரிமை. தமிழ் பேசும் பயணிகள் தங்களது உரிமையைப் பாதுகாக்க ஒன்றிணைந்து இந்த குறையை உயர்த்த வேண்டும்.

சக்கர வியூகம் தினசரி நாளிதழ் செய்திகளுக்காக

பாண்டியன் – ஆசிரியர் / நிறுவனர்

88705 00000

Scroll to Top