Sakkraviyugam

September 11, 2026

பாலமேடு மாணிக்கம்பட்டி – உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், மருத்துவ காப்பீடு, பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை, காவல்துறை சார்ந்த மனுக்கள், ஆதார் அட்டையில் திருத்தங்கள், உள்ளிட்ட பல்வேறு மனுக்களை அந்தந்த துறைச் சார்ந்த அரங்குகளில் உள்ள அலுவலர்களிடம்
பொதுமக்கள் வழங்கினர். இதில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நேரடியாக கள ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, வள்ளி, துணைவட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்தையன், தன்ராஜ், மற்றும் ஊராட்சி செயலர்கள் பெரிச்சி, தம்பிதுரை,ராஜா,
மாணிக்கம்,
உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்திகளுக்காக

செய்தியாளர் T. உதயசூரியன்

Scroll to Top