தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சென்னை :
இன்று 25.09.25 காலை 10 மணியளவில் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் மின்சார வாரியத் தலைவர் அவர்களை சந்தித்து ஊதிய உயர்வு மற்றும் வேலை பளு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடர்ந்திட வேண்டி கடிதம் அளித்து பேசி உள்ளார்கள்.
- 2018 ஒப்பந்தபடி உள்ள பதவிகளை அனுமதித்திடவும் அதன் தொடர்புடைய அடிப்படை பதவிகளை பூர்த்தி செய்திட வேண்டும்.
- ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடன் தொடங்கிட வேண்டும்.
- ஊதிய உயர்வு தொழிலாளர்களுக்கு அளிக்கும்போதே Class 1 & Class 2 அலுவலர்களுக்கும் பொறியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்கள்.
- Class 1 ,2 ,3 & 4 அனைவருக்கும் வழக்கம்போல் ஊதிய உயர்வு அளிப்பதற்கு உத்தரவாதம் அளித்துள்ளதுடன்
- மின்வாரிய அலுவலர்களுடன் இவ்வாரத்திற்குள் பேசி பத்து நாட்களில் ஊதிய உயர்வு மற்றும் வேலைபளு பேச்சுவார்த்தையை தொடர்ந்திட உத்திரவிடுவதாகவும் தமிழக அரசு நிதித்துறையிலும் பேசி விரைவாக ஊதிய உயர்வை பேசி முடித்திடலாம் எனவும் நம்பிக்கையுடன் தெரவித்துள்ளார்கள் என தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுதெரிவித்துள்ளது.