Sakkraviyugam

April 18, 2026

TNEB ஊதிய உயர்வு – சங்கங்களின் நிலை, அரசுகளின் நிலை, எதிர்கால பாதை? – சங்கங்களின் ஒற்றுமைக்கு விடப்பட்ட சவால்!

மாநில நிலவரம் – TNEB ஊதிய உயர்வு
தமிழ்நாடு மின்வாரியத்தில் 2023 டிசம்பர் 1 முதல் ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட வேண்டும் என மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. ஆனால்:

  • 2025 ஜூலை 24 அன்று TANTRANSCO அலுவலகத்தில் wage revision பேச்சுவார்த்தை நடைபெற்றது.
  • தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் மாநில பொதுச் செயலாளர் மற்றும் மாநில பொருளாளர் கலந்து கொண்டார்கள்.
  • பேச்சுவார்த்தையில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை; வெறுமனே கோரிக்கைகள் கேட்டபின், குழுவினர் கலைந்து சென்றனர்.தொழிற்சங்கங்களை தனித்தனியாக அழைத்து பேச வேண்டும் என்ற கோரிக்கையை பெரும்பான்மையான சங்கங்கள் தெரிவித்தன.
  • அதன்பிறகு வாரிய தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இது குறித்து மின் வாரிய ஜனதா தொழிற்சங்கத்தின் மாநில பொருளாளர் திரு ஜேம்ஸ் கென்னடி அவர்கள் தெரிவித்தது.

இது சங்கங்களின் ஒற்றுமைக்கு விடப்பட்ட சவால்

  • வழக்கமாக ஜாயிண்ட் கவுன்சில் மூலம் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து வாரிய தலைவருக்கு கடிதம் எழுதுவது வழக்கம்.
  • ஆனால் கடந்த முறை CITU மற்றும் Employees Federation உள்ளிட்ட சில சங்கங்கள் கையொப்பமிடாமல் வெளியேறியதால், தற்போது ஜாயிண்ட் கவுன்சில் அமைப்பதில் சங்கங்களிடைய தயக்கம் ஏற்பட்டுள்ளது.
  • இது ஒற்றுமை சீர்கேடாகவும், தொழிலாளர்களின் உரிமை பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தும் சூழ்நிலையாகவும் உள்ளது.

பணியிடங்கள் மற்றும் இடைக்கால நிவாரணம்:

  • TNEB-இல் 60,000+ பணியிடங்கள் காலியாக உள்ளன – Field Assistant, Assessor, Technical Assistant உள்ளிட்டவை. ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் குறித்தும் கேங்மேன் பணியாளர்களின் பணிவரன் முறை குறித்தும் அனைத்து சங்கங்களும் வலியுறுத்தி பேசிய நிலையில் பேச்சுவார்த்தை தாமதப்படுத்தப்படுவதால் மின்வாரிய பணியாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இடைக்கால நிவாரணம்:


மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் , ஒவ்வொரு தொழிலாளிக்கும் அடிப்படை சம்பளத்தில் 5% இடைக்கால நிவாரணமாக கோரியது. மற்ற சில சங்கங்களும் இடைக்கால நிவாரணத்தை வலியுறுத்தினர். ஆனால் வாரியம் இதனை ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. இன்று வரை இடைக்கால நிவாரணம் வழங்கப்படவில்லை. பேச்சுவார்த்தையையும் நடத்தாமல் இடைக்கால நிவாரணமும் தராமல் இழுத்து அடிப்பது வேதனை அளிக்கும் விஷயமாக தொழிற்சங்கங்கள் கருதுகின்றன. தொழிலாளர்களும் மன அழுத்தத்திலேயே உள்ளனர்.

  • கடந்த ஊதிய உயர்வு (2019) 2023 மே மாதத்தில் மட்டுமே 6% உயர்வுடன் அமல்படுத்தப்பட்டது.
  • மத்திய அரசு – 8வது சம்பள கமிஷன் நிலை
  • மத்திய அரசு 8வது சம்பள கமிஷனை அமைக்க உத்தரவிட்டுள்ளது.
  • ஆனால் தலைவர், உறுப்பினர்கள், Terms of Reference இன்னும் அறிவிக்கப்படவில்லை.
  • 2025 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என ஊழியர்கள் எதிர்பார்த்தாலும், இதுவரை முடிவுகள் எதுவும் இல்லை.
  • அகவிலைப்படி அடிப்படையில் இணைக்க வேண்டும், குறைந்தபட்ச சம்பள உயர்வு, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் நிலவுகின்றன.

எதிர்கால பாதை – சங்கங்களின் பங்கு

  • ஒற்றுமை மீண்டும் கட்டமைக்க சங்கங்களுக்குள் ஆலோசனை அவசியம்.
  • RTI வழியாக வாரிய பதில்கள் பெறுதல், புதிய கூட்டம் அழைத்தல், பொதுமக்கள் ஆதரவை பெறுதல் ஆகியவை முக்கியம்.
    -ஒருமித்த கருத்துடன், தொழிலாளர்களின் உரிமைக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். என்பதே எங்களின் வேண்டுகோளாக உள்ளது என்றார்.

மேலும் நமது செய்தியாளர் சென்னையில் இருந்து அளித்த தகவலின் படி , மின்வாரியத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் வாரியத் தலைவரையும் தலைமை பொறியாளர் பணியமைப்பு அவர்களையும் நேரடியாக சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பணியாளர்கள் அனைவரும் நேரடியாக வாரிய தலைவரிடம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பயணம் செய்து தங்களின் கோரிக்கை மனுக்களை அளிக்கிறார்கள். குறைந்தபட்சம் 500 முதல் 1000 என மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தொழிற்சங்கங்களும் வாரிய தலைவரை சந்திக்கலாம்.

இதே போல் தலைமைப் பொறியாளர் பணியமைப்பு அவர்களும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணியாளர்களிடமிருந்தும், புன் கிழமைகளில் தொழிற்சங்கங்களிடமிருந்தும் மனுக்களை வாங்கி வருகிறார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் தீர்வு கிடைக்கிறதா என்றால் கேள்வி குறிதான். நமக்கு ஏற்படும் சந்தேகம் ஒன்றுதான் வாரிய தலைவர் மற்றும் தலைமை பொறியாளர் அவர்களின் கீழ் சுமார் 50,000 பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். குறைந்தபட்சம் ஐந்தாயிரம் மேல்மட்ட ,அதிகாரம் உள்ள அதிகாரிகள் இருக்கக்கூடும் . இவர்களால் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாததால் வாரிய தலைவர் சொன்னால் கேட்பார் என்று தானே சென்னைக்கு செல்கிறார்கள்? ஒவ்வொரு விண்ணப்பதாரரும் குறைந்தபட்சம் ரூபாய் 2000 முதல் 5000 ரூபாய் வரை செலவு செய்த பிறகு, மின்வாரிய பணிகளுக்கு செல்லாமல், விடுப்பு எடுத்த பிறகு சென்னைக்கு செல்ல முடியும் என்பதை ஏன் மறந்து போனார்கள்? பெரும்பாலும் ணி இடம் மாறுதல் கோரும் விண்ணப்பங்களே அதிகம் வருவதாக தெரிகிறது. காலி பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே இதற்கு தீர்வு.

தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த மறுத்து வரும் அரசாங்கம் இதற்கு என்ன சொல்லப் போகிறது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.கடவுளுக்கே வெளிச்சம்.

Scroll to Top