Sakkraviyugam

April 18, 2026

த.வெ.க. டெபாசிட் வாங்கினால் நாங்கள் சேலை கட்ட தயார் – திமுகவினர் சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்து ஆண்டியான கட்சி நிர்வாகிகளால் த.வெ.க.க்குள் சலசலப்பு
சின்னாளபட்டி ஆக-8
ஆத்தூர் தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலில் தென்பாண்டி சிங்கம் ஐ.பெரியசாமி அவர்களை எதிர்த்து த.வெ.க கட்சி போட்டியிட்டு அந்த கட்சி டெபாசிட் வாங்கினால் நாங்கள் சேலை கட்ட தயார் என்று திமுகவினர் சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1989-ம் ஆண்டு முதல் இன்று வரை போட்டியிட்டு முடிசூடா மன்னராக வலம்வருபவர் தொகுதி மக்களால் தென்பாண்டி சிங்கம் என்று அழைக்கப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து கட்சிகளையும் டெபாசிட் இழக்க செய்து தமிழக சட்டமன்ற தேர்தலில் வரலாற்று சாதனையாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்தி 571 வாக்குகள் பெற்று மாபெரும் சாதனை படைத்தார். கடந்த தேர்தல்களில் முக்கிய பிரதான கட்சியான அதிமுகவை சேர்ந்த முன்னாள் முப்பெருந்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டு ஐ.பெரியசாமி அவர்களிடம் தோல்வியடைந்தார். கட்சி பலம், பண பலம் இருந்தும் ஆத்தூர் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் வெற்றி பெறாமல் போகவே கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்குஆத்தூர் தொகுதியை ஒதுக்கி அதிமுக தப்பித்து கொண்டது. தற்போது நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் (த.வெ.க) 2026ம் வருட சட்டமன்ற தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் நடிகர் விஜய் போட்டியிட்டு 1 லட்சத்து 35ஆயிரத்து 572 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெறுவார் என அக்கட்சியினர் ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், சின்னாளபட்டி பேரூர் கழகம் சார்பில் வால்போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களை பார்த்த பொதுமக்கள் சிரித்தபடியே நடந்து சென்றனர். இந்நிலையில் திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் வேல்முருகன் சார்பாகவும், ஒன்றிய இளைஞரணி சார்பாகவும் ஒட்டப்பட்ட போஸ்டரில் எங்கள் அமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு தமிழக வெற்றிக்கழகம் டெபாசிட் வாங்கினால் நான் சேலை கட்டிக்கொள்கிறேன் நண்பா(ப்ரோ) என கேள்வி கேட்டும் இல்லை என்றால் நீங்க? ப்ரோ? என வாசகம் குறித்த தவெக கட்சிக்கு எதிராக கண்டன வால்போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களை பார்த்த ஆத்தூர் தொகுதி பொதுமக்கள் நேற்று கட்சி ஆரம்பித்து இன்று ஆத்தூர் தொகுதியில் சவால் விடும் அளவிற்கு நடிகர் விஜய் கட்சி என்ன அந்த அளவிற்கு ஆத்தூர் தொகுதியில் தொண்டர்களை வைத்துள்ளாரா? என கேள்வி கேட்கின்றனர். ஆத்தூர் தொகுதியில் முதன்முதலாக 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே வால்போஸ்டர் யுத்தம் தொடங்கிவிட்டது.

Scroll to Top