Sakkraviyugam

April 18, 2026

கே.சி.பட்டி ஊராட்சி – உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ இ.பெ.செந்தில்குமார்

The current image has no alternative text. The file name is: 555555.jpg

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை பகுதி கே.சி. பட்டி ஊராட்சியில் நடைபெற்ற
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் எம்.எல்.ஏ இ.பெ. செந்தில்குமார்.
அதன் பிறகு அவர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்று கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடைய வேண்டுமென்ற சீரிய சிந்தனையுடன் செயல்படுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர். உங்களுடன் ஸ்டாலின்“ முகாமில் கொடுக்கப்படும் கோரிக்கை நிறைவேற்றிக் கொடுக்கப்படும். கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் அனைத்து துறை அதிகாரிகளையும் தேடிச் சென்று அலைய வேண்டியது இல்லை. உங்கள் கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் மனுக்கள் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும். இந்த முகாமில் கலைஞர் உரிமைத் தொகைக்கு சுமார் 100 க்கும் மேற்பட்டோர் மனு செய்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் கிடைக்கும் என உறுதி அளித்தார். மேலும் முகாமில் குடும்ப அட்டை பெயர் மாற்றம், மின்சார வாரியம் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைப்போல் மகளிர் உரிமைத் தொகை, முதல் தவணையாக சுமார் 1.16 கோடி நபர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. மேலும், விடுபட்ட நபர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை தளர்த்தி கிராமப்புறத்தில் உள்ள நடுத்தர மக்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில்
விவசாயிகளின் கோரிக்கையை கேட்டு அக்கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு தான் இந்த மக்கள் அரசு, மக்களுடைய முதல்வர் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் மகளிர் உரிமைத்தொகைக்கு மாவட்ட வாரியாக, தொகுதி வாரியாக பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கையை கேட்டுக்கொண்டிருக்கிறார். இம்முகாமில் மனுக்கள் அளித்தால் தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் திருநாவுக்கரசு, வட்டாட்சியர் பாபு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ பிரபா மாணிக்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் கருமலை பாண்டியன், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கே.சி.பட்டி ஏ. சி.ஐயப்பன், கே.சி.பட்டி மாரிமுத்து , கே.சி.பட்டி ஊராட்சி செயலர் ராஜேந்திரன் உள்ளிட்ட மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் சுமார்
1000-ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர்கள் கலந்துகொண்டனர்.

Scroll to Top