Sakkraviyugam

April 18, 2026

1, 35,572 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூட வா ! என த.வெ.க. தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்த கட்சி தொண்டர்கள்.

தற்போது நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் (த.வெ.க) 2026ம் வருட சட்டமன்ற தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் நடிகர் விஜய் போட்டியிட்டு 1,35,572 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெறுவார் என அக்கட்சியினர் ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், சின்னாளபட்டி பேரூர் கழகம் சார்பில் வால்போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். (அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து கட்சிகளையும் டெபாசிட் இழக்க செய்து தமிழக சட்டமன்ற தேர்தலில் வரலாற்று சாதனையாக 1,35,572 வாக்குகள் பெற்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது ) இந்நிலையில் திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் வேல்முருகன் சார்பாகவும், ஒன்றிய இளைஞரணி சார்பாகவும் ஒட்டப்பட்ட போஸ்டரில் எங்கள் அமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு தமிழக வெற்றிக்கழகம் டெபாசிட் வாங்கினால் நான் சேலை கட்டிக்கொள்கிறேன் நண்பா(ப்ரோ) என கேள்வி கேட்டும் இல்லை என்றால் நீங்க? ப்ரோ? என வாசகம் குறித்த தவெக கட்சிக்கு எதிராக கண்டன வால்போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

ஆத்தூர் தொகுதியில் சவால் விடும் அளவிற்கு நடிகர் விஜய் கட்சி என்ன அந்த அளவிற்கு ஆத்தூர் தொகுதியில் தொண்டர்களை வைத்துள்ளாரா? என கேள்வி கேட்கின்றனர்.

Scroll to Top