Sakkraviyugam

April 20, 2026

நிதிநிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவுகளை தவறுதலாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!

ஆத்தூர் தொகுதியில் நிதிநிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவுகளை தவறுதலாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி.
நீதிமன்ற உத்தரவுகளை காட்டி குடியிருப்பவர்களை முறையாக வெளியேற்றாமல் வீடுகளை பூட்டிவிட்டு செல்வதாக ஆத்தூர் தொகுதியில் தொடர் புகார்
.
சின்னாளபட்டி ஆக-12
நீதிமன்ற உத்தரவுகளை காட்டி குடியிருப்பவர்களை முறையாக வெளியேற்றாமல் வீடுகளை பூட்டிவிட்டு செல்வதாக ஆத்தூர் தொகுதியில் தொடர் புகார்கள் வந்ததையடுத்து ஆத்தூர் தொகுதியில் நிதிநிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவுகளை தவறுதலாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் உறுதி அளித்தார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தார் சட்டமன்ற தொகுதியில் உள்ள கிராமங்களில் வத்தலக்குண்டு, தேனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் உள்ள நிதி நிறுவனங்கள் கிராம மக்களின் அறியாமையை பயன்படுத்தி, வட்டிக்கு பணம் கொடுத்து வருகின்றனர். வீடுகளை அடமானம் வைத்து கிராம மக்கள் கடன் வாங்கும்போது அவர்களிடம் பணம் கொடுக்கும் நிதி நிறுவனங்கள் பயனாளிகள் மாதத்தவணை கட்டினால் அதற்கு முறையான இரசீதுகள் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் பணம் கட்டியவர்களுக்கு பாக்கித்தொகை எவ்வளவு இருக்கிறது என்பது தெரியாமல் போய்விடுகிறது. இதை பயன்படுத்தி தனியார் நிதி நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவு என கூறி வழக்கறிஞர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு கடன் வாங்கியவர்களின் வீட்டை முறை கேடாக ஜப்தி செய்வதாக ஆத்தூர் தொகுதியில் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதைத்தவிர குடியிருப்பவர்கள் உடுத்த ஆடைகள் கூட எடுக்க விடாமல் அவர்களை விரட்டுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் ஒரு வீட்டை ஜப்தி செய்ய வந்த நிதி நிறுவனம், வீட்டின் உரிமையாளர்கள் இல்லாதபோது வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டானர். இதனால் குழந்தைகளுடன் 4 நாட்களாக தெரு ஓரமாக தங்கி உள்ளனர். அவர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களை சந்தித்து தனியார் நிதி நிறுவனம் தங்களை ஏமாற்றியது சம்மந்தமாக புகார் அளித்ததோடு கண்ணீருடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். உடனே அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள்

மேலும், வீடுகளை இழந்தவர்களிடம் காவல் துறை அதிகாரிகளிடம் முறையான புகார் செய்ய வேண்டுமென அறிவுறுத்தினர். அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Scroll to Top