இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி
அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டு
மக்களுக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அரசின் திட்டங்களை வீடு
தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு
கிடைக்கச் செய்ய வேண்டும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்க்க
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமை
தொடங்கி வைத்துள்ளார்கள். கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் யாரையும்
தேடிச் சென்று அலைய வேண்டியது இல்லை. உங்கள் கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில்
மனுக்கள் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில்
தீர்வு காணப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே நேரில் வந்து மனுக்களை
பெறுவதாக கருதும் அளவிற்கு இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்களுக்கு வீடு தேடிச் சென்றடைய
வேண்டும் என்பதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்முகாமில்
மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை,
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, கணவனை இழந்தவர்கள், உதவித்தொகை
பெறாதவர்கள், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால்
உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டத்தில் சுமார் 1.16
கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும்
இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில்
கலந்துகொண்டு மனு அளித்து, ஒப்புகைச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த மனு மீது
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, உங்கள் வீடு தேடி பதில் வந்து சேரும்.
தமிழ்நாட்டில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 இலட்சம் வீடுகள் கட்ட
அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 வீடுகள் கட்ட அனுமதி
வழங்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும்
திட்டத்தில் 2 இலட்சம் வீடுகளை சீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ஒரு இலட்சம்
வீடுகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சீரமைப்பு பணிகள்
மேற்கொள்ள இயலாத அளவிற்கு பழுதடைந்துபோன வீடுகளுக்கு பதிலாக புதிதாக வீடுகள்
கட்டுவதற்காக மறுகட்டமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்பாக வசிப்பதற்காக பட்டா வழங்கி அதில் வீடு
கட்டி வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.5.00 இலட்சத்திற்கு சிகிச்சை
மேற்கொள்ளலாம். சிகிச்சைக்கு கூடுதலான செலவு ஏற்படுமெனில் அதுகுறித்து மாண்புமிகு
முதலமைச்சர் அவர்களுக்கு மனு அனுப்பி வைத்தால் சிகிச்சைக்கான முழு தொகையை
பெற்றுக்கொள்ளலாம். ஆத்துாரில் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்களிடம் அனு அளித்து ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டிலான சிகிச்சை பெற்று
நலமடைந்துள்ளார். எனவே, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் அனைவரும் பதிவு செய்ய
வேண்டும். அதற்கான தொகையினை அரசு வழங்கும். விலைமதிப்பில்லா உயிர்களை
பாதுகாப்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியாக உள்ளார்.
அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்ற
திட்டம் வாயிலாகவும், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் என்ற திட்டம் வாயிலாகவும் மாதம்
ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
அரசின் திட்டங்களை மக்களுக்கு சென்றடைய செய்வதிலும், வளர்ச்சித் திட்டப்பணிகளை
அனைத்துப் பகுதிகளிலும் சீராக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாக உள்ளது. இது
மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட
இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது.
மக்களை புரிந்து. மக்களின் எண்ணங்களுக்கேற்ப திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி
வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக அவருக்கு
என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
அவர்கள் பேசினார்.
இந்த முகாமில், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டதையடுத்து, பட்டா,
புதிய குடும்ப அட்டைகள், சான்றுகளை மனுதாரர்களுக்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை
அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்த முகாமில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல் மற்றும் துறை
சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.