‘அக்கா.. மதினி.. வீட்டில இருக்கீங்களா?” – ஆத்தூரில் பாசமழை பொழிந்து வாக்குச் சேகரிக்கும் வெல்லும் தமிழ் பெண்கள்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திராவிட மாடல் ஆட்சி நாயகன் திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படியும், திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி கிளைக் கழக மற்றும் வார்டுகளைச் சேர்ந்த ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீட்hக சென்று நமக்கெல்லாம் காவல் தெய்வமாக இருக்கும் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டும், ஆத்தூர் தொகுதியின் பாதுகாலர் ஐயா ஐ.பி. அவர்கள் வரலாறு காணாத வெற்றியை பெற வேண்டுமென கூறி வாக்குகள் சேகரிப்பதோடு தமிழக அரசின் சாதனை திட்டங்களை பெண்கள் மத்தியில் எடுத்துரைத்து வருகின்றனர். கிராமங்களில் வாக்கு சேகரிக்க செல்லும் பெண்கள் அக்கா, மதினி வீட்டிலே இருக்கிறீங்களா என உறவு முறை சொல்லி அவர்கள் வீட்டின் உள்ளே சென்று அமர்ந்து வாக்குகள் சேகரிப்பது பொது மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரிசல்பட்டி ஊராட்சிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வந்த அமைச்சர் ஐ.பெரியசாமி வெல்லும் தமிழ் பெண்கள் வாக்குகள் சேகரிப்பதை பார்த்தவுடன், காரிலிருந்து இறங்கி அவர்களை பாராட்டி வாழ்த்தினார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் இன்பராஜ், அகரம் பேரூராட்சி மன்றத்தலைவர் நந்தகோபால், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஸ், கரிசல்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் பால்ராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜஸ்டின் மிக்கேலம்மாள், சுப்புலெட்சுமி; வள்ளுவதாஸ், ஆசிரியர்கள் அமலஇளவரசு, ஜோசப் ஆசான், கிளைச் செயலாளர் ஜஸ்டீன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
