“யாரு கழுவுறது?” என்ற அலட்சியமே குப்பை மலையின் அஸ்திவாரம்!
ஒரு அதிரடி விழிப்புணர்வுப் பார்வை….
கௌரவக் கொலை செய்யப்படும் இயற்கை: வீடுகளில் சில்வர் பாத்திரங்கள் இருந்தாலும், “கழுவ சோம்பேறித்தனம்” பட்டு பிளாஸ்டிக் கவர்களில் உணவு வாங்குவதுதான் 90% குப்பைக்குக் காரணம்.
அரசியல் & ஆன்மீகக் கழிவுகள்: திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கில் குவியும் பிளாஸ்டிக் பாட்டில்களும் காகிதக் குப்பைகளும் நீர்நிலைகளை மெல்லக் கொன்று வருகின்றன.
தீர்வு – ‘ஜோல்னா பை’ கலாச்சாரம்: ஒவ்வொரு தனிநபரும் தனக்கான தட்டு, டம்ளர் மற்றும் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் சென்றால் மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் அனுமதி என்ற சட்டம் வர வேண்டும்.
தலைவர்கள் முன்மாதிரி: பிரதமர் முதல் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வரை அனைவரும் பொது மேடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.
மதுபானக் கழிவுகள்: காலி பாட்டில்களை மீண்டும் பெற்றுக்கொண்டு பணம் வழங்கும் முறையைக் கொண்டுவந்தால், விவசாய நிலங்களும் நீர்நிலைகளும் பாட்டில் கழிவுகளிலிருந்து தப்பும்.
இறைச்சிக் கழிவுகள்: சாலை ஓரங்களிலும் பாலங்களிலும் துர்நாற்றம் வீசும் கோழிக் கழிவுகளைத் தடுக்க, “பாத்திரங்களில் மட்டுமே இறைச்சி” என்ற கட்டுப்பாடு அவசியம்.
மாற்றம் உன்னிடமிருந்து தொடங்கட்டும்! – “ஜோல்னா பையும், கையில் தூக்குவாளியும் கௌரவக் குறைச்சலல்ல… அவை நம் தலைமுறையைக் காக்கும் கேடயங்கள்!”
