வாடிப்பட்டி.செப்.23.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்,ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக பேரூர் செயலாளர் பால்பாண்டியன் வரவேற்றார். இதில் அமைச்சர் மூர்த்தி, பேசியது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நமது முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார். சோழவந்தான்தொகுதியில் குடிநீர் வசதி. பாலங்கள், கால்வாய் சாக்கடை,சாலை வசதிகள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராக மீண்டும் தளபதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்பார். அதற்கு இந்த சோழவந்தான் தொகுதி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் பாலாராஜேந்திரன், பசும்பொன்மாறன், மாவட்டத் துணைச் செயலாளர் புதூர் சேகர், சோழவந்தான்
பேரூராட்சி தலைவர் ஜெயராமன், வாடிப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் வக்கீல் கார்த்திக், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, பேரூர்செயலாளர், சத்தியபிரகாஷ், முன்னாள் பேரூர் செயலாளர்பிரகாஷ், இளைஞரணி வினோத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகளுக்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்
உதய சூரியன்