Sakkraviyugam

April 18, 2026

11, 12ஆம் வகுப்பு பள்ளி, கல்லூரி கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்- திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே தகவல்!

திருப்பூர் மாவட்டத்தில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி
மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில்
ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப்
போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


திருப்பூர் மாவட்டத்தில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ,
மாணவியர்களுக்கு 14.10.2025ஆம் நாளன்றும், கல்லூரிகளில் பயிலும் மாணவ,
மாணவியர்களுக்கு 15.10.2025ஆம் நாளன்றும் கவிதை, கட்டுரை, பேச்சுப்
போட்டிகள் திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரிக் கூட்டரங்கில் காலை 10.00
மணி முதல் நடைபெறவுள்ளன.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும், கல்லூரிப் போட்டிகளில்
கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல், கல்லூரிகளின் முதல்வர்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரில் / அஞ்சலில் அல்லது
ddtamil607@gmail.com என்ற மின்னஞ்சலில் 09.10.2025ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலிருந்து கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொருப் போட்டிக்கு ஒருவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மற்றும் ஒவ்வொரு கல்லூரியிலிருந்து கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொருப் போட்டிக்கு ஒருவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.


ஒவ்வொரு போட்டிக்கும்

முதல்பரிசு ரூ.10,000/-

இரண்டாம் பரிசு ரூ.7,000/-
மூன்றாம் பரிசு ரூ.5,000/- வீதம்

மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.66,000/-
காசோலையாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ்
நாரணவரே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Scroll to Top