Sakkraviyugam

September 11, 2025

குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு !

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே இ.ஆ.ப.
அவர்கள் (28.08.2025) திருப்பூர், அனுப்பர்பாளையம் மரியாலயா
பெண் குழந்தைகள் இல்லம் மற்றும் 15 வேலம்பாளையம், சமூக சேவை
அமைப்பு உதவும் இதயங்கள் இல்லம் ஆகிய குழந்தைகள் பராமரிப்பு
இல்லங்களில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே இ.ஆ.ப. அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள்
துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மேற்பார்வையின் கீழ்
“இளைஞர் நீதிச்சட்டம்-2015” -ன் கீழ் பதிவு செய்யப்பட்ட 09 குழந்தைகள்
பராமரிப்பு இல்லங்களும், 01 குழந்தைகள் வரவேற்ப்பு இல்லமும், 01 தத்துவள
மையமும் செயல்பட்டு வருகிறது. இம்மையங்கில் ஐந்து வயதிற்கு மேற்பட்ட 18
வயதிற்குட்பட்ட பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவை என கருதப்படும்
குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் ஆணைப்படி குழந்தைகள்
பராமரிப்பு இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
அதில் தற்பொழுது மொத்தம் 223 குழந்தைகள், தற்காலிகமாக தங்கி
கல்வி பயின்று வருகின்றனர். அங்கு குழந்தைகளுக்கான அடிப்படைத்
தேவைகள், கல்வி மற்றும் குழந்தைகளின் திறனுக்கேற்ற படி பல்வேறு திறன்
மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில்,
இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் 10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு முடித்த
குழந்தைகளுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம்
உதவித்தொகையுடன் கூடிய தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி
ஏற்படுத்தித் தரப்படுகின்றது. இல்லத்திலுள்ள குழந்தைகளின் எதிர்கால
நலனை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கான மாற்றுப் பராமரிப்பு முறை
திட்டங்களும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.


மேலும், குழந்தைகள் இல்லங்களிலிருந்து தங்களது குடும்பத்துடன்
செல்லும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு நிதி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாதம்
ரூ.4,000/- நிதியும், இல்லத்திலிருந்து கல்வி பயின்று வெளியேறும் 18 வயது
முடிவடைந்த மற்றும் 18 வயது முடிவடையும் தருவாயிலுள்ள குழந்தைகளுக்கு அவர்களது 21 வயது முடிவடையும் வரை பிற்காப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.4,000/- ம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் “ மிஷன் வாத்சல்யா”திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் இன்றைய தினம், திருப்பூர் அனுப்பர்பாளையம்
மரியாலயா பெண் குழந்தைகள் இல்லம், திருப்பூர், அனுப்பர்பாளையம்
மரியாலயா பெண் குழந்தைகள் இல்லம் மற்றும் 15 வேலம்பாளையம், சமூக
சேவை அமைப்பு உதவும் இதயங்கள் இல்லம் ஆகிய குழந்தைகள் பராமரிப்பு
இல்லங்களில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதிகள்,
உணவுப்பொருள்களின் தரங்கள், அடிப்படை வசதிகள், சுகாதாரவசதிகள்
ஆகியவை குறித்தும், இல்லங்களில் தங்கி கல்வி பயின்று வரும்
குழந்தைகளுடன் உரையாடி, குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்
வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ்
நாரணவரே இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வுகளில் , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
திரு.ரியாஸ் அகமது பாஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து
கொண்டார்கள்.

Scroll to Top