திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணாக்கர்களிடையே தமிழர்களின்
மரபையும், தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில்”மாபெரும்
தமிழ்க் கனவு” என்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்வு இன்று நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், நத்தக்கடையூர் காங்கேயம்
தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன் அவர்கள்
தலைமையில் இன்று (29.08.2025) நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில்
நிமிர்ந்து நில் என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் முனைவர் செ.சைலேந்திர பாபு,
இ.கா.ப. (ஓய்வு) அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள்.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களிடையே
தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ்
கனவு என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகள் மாவட்டந்தோறும்
நடத்தப்பட்டு வருகிறது.நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின்
செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான
வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு
அரசின் தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில் இந்த பரப்புரை திட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் தமிழ் மரபும் - நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு,
சமூகப் பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு,
தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில்
வளர்ச்சி, தொழில் முனைவுக்கான வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் கல்விப் புரட்சி
ஆகிய தலைப்புகளின் கீழ் சொற்பொழிவுகள் நடத்த திட்டமிடப்பட்டு
செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி
மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும்
வகையில் பண்பாட்டு பரப்புரை நிகழ்வு இன்று நத்தக்காடையூர் காங்கேயம்
தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நிமிர்ந்து நில் என்ற தலைப்பில் சொற்பொளிவாளர்
முனைவர்.செ.சைலேந்திர பாபு அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு
சொற்பொழிவாற்றினார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கார்த்திகேயன்
அவர்கள் இத்திட்டம் குறித்த நோக்கவுரையை வழங்கினார்.

சொற்பொளிவாளர் முனைவர் செ.சைலேந்திரபாபு அவர்கள் ”
நிமிர்ந்து நில்” என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவுரை
திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும்,
தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ” நிமிர்ந்து நில்” என்ற தலைப்பில்
இன்றைய தினம் கருத்துறை ஆற்ற வாய்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து,
மாணவர்களாகிய உங்களுக்கு இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கல்லூரி படிப்பு என்பது நமது முன்னோர்களுக்கொல்லம் கிடைக்காத வாய்ப்பு
மாணவர்களாகிய உங்களுக்கு கிடைத்துள்ளது. பூமி தோன்றி 460 கோடி ஆண்டுகளும்,
உயிரினங்கள் தோன்றி 360 கோடி ஆண்டுகளும் மனித இனம் தோன்றி 25 இலட்சம்
ஆண்டுகளும், மனிதன் சிந்திக்க தொடக்கியது 70 ஆயிரம் கோடி ஆண்டுகளும்,
மனிதர்கள் விவசாயம் செய்ய தொடங்கியது 10 ஆயிரம் கோடி ஆண்டுகள், பிரமிடுகள்
கட்டியது 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவும், கல்லறை கட்டியது 2 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பாகவும், தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டியது ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பாகவும், கைபேசி வந்தது 30 வருடங்களும், வாட்ஸ்
ஆப் வந்தது 10 வருடங்கள் ஆனாலும் நமது முன்னோர்கள் கல்லூரியில் படிக்க வில்லை.
நமக்கு கிடைந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இங்கிலாந்தில்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கல்லூரியில் படித்துள்ளார்கள்.
சாக்ரட்டிஸ் அவர்கள் வாழ்க்கையின் நோக்கமும், வாழ்க்கையின் பொருளும்
மனமகிழ்ச்சியே என்று கூறியுள்ளார்கள். பொதுவாகவே மாணவர்களாகிய நீங்கள்
மகிழ்ச்சியான மனிதர்களாக மாற்றி கொள்ளுங்கள். நல்ல நாடு, நல்ல அம்மா அப்பா
அமைந்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. நாம் சுதந்திரமாக வாழ்வது மகிழ்ச்சிக்குரியது.
உங்களது சிந்தனையை கட்டுப்படுத்த முடியாது. மாணவர்களாகிய நீங்கள் சிந்திக்க
வேண்டும், துயரம் நிறைந்த மக்களுக்காக சிந்திக்க வேண்டும். துயரம் நிறைந்த மக்களின்
குரலாக உங்கள் குரல் ஒலிக்கவேண்டும்.
சிறையில் கூட 25,000 நபர்கள் உள்ளார்கள். அனைவரும் குற்றவாளிகள்
கிடையாது. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அவர்களை குற்றவாளிகளாக மாற்றி உள்ளது.
சிறையில் அனைத்து கிடைக்கும் ஆனால் சுதந்திரம் கிடைக்காது. மனதை மகிழ்ச்சியாக
வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் எதையும் சாதிக்க முடியும். நிரந்தர மகிழ்ச்சி
என்பது நாம் செய்யும் செயலில் உள்ளது. கல்வியின் நோக்கம் என்பது வாழ்க்கையில்
உயர்ந்த நிலையை அடைவதையும் விட தமிழ்மொழி படிப்பது மன மகிழ்ச்சி. ஒரு தமிழ்
மாணவர் குறைந்து 100 பக்கங்கள் படிக்க வேண்டும். தமிழில் நிறைய நூல்கள் உள்ளது.
மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும்.
நிறைய சாதிக்க வேண்டும். 18 வயதில் 8 கோடி சம்பளத்தில் உள்ள மாணவனும்
இங்குதான் உள்ளார். நிறைய திறமை உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
வாய்ப்பு என்பது தானாக கிடைக்காது, நாம் தான் தேடிக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு
11.5 சதவீதம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக
உள்ள கல்லூரியில் 20 இலட்சம் இடங்களில் உள்ளது. அதில் தமிழ்நாட்டில் 4 இலட்சம்
இடங்கள் உள்ளது. பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்வர்களில் 42 சதவீதம்
தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலையில் தான் வேலை செய்கிறார்கள். கல்லூரி செல்லும்
மாணவர்களில் தமிழ்நாட்டில் தான் 52 சதவீதம் உள்ளது. தனி நபர் வருமானம் அதிகமாக
உள்ள நாடு தமிழ்நாடு, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், முதல்
பட்டதாரிக்கு ரூ.25,000, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ்
இலவச பயிற்சிகள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் நாடு தமிழ்நாடு, படிப்பு
வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும். மதிப்பை கொடுக்கும்.
வாழ்வில் மனமகிழ்ச்சி வேண்டும், கல்லூரி பருவத்தை கருத்தில் கொள்ள வேண்டும்,
நேரத்தை நேர்த்தியாக செலவழித்து காலத்தில் கடமையாற்ற வேண்டும், தமிழோடு
இணைந்து தரணியை உயர்த்த வேண்டும். 24 மணி நேரம் 24 தங்க நாணயங்களை
போன்றது ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு தங்க நாணயத்தை போல நினைத்து
காலத்தை பயனுள்ளதாக கழிக்க வேண்டும். இவ்வாறு நிமிர்ந்து நில் என்ற தலைப்பில்
சொற்பொழிவாளர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப. (ஓய்வு) அவர்கள்
சொற்பொழிவாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், கோவை
மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் நா.செண்பகலெட்சுமி, மாபெரும்
தமிழ்க் கனவு ஒருங்கிணைப்புக் குழு அலுவலர் முனைவர் இ.சேனாவரையன், மாபெரும்
தமிழ்க் கனவு மாவட்ட தொடர்பு அலுவலர் முனைவர் வ.கிருஷ்ணன், கண்காட்சி
அரங்குகள் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஆசிரியர் நிர்மலா, பேராசிரியர்கள்,
கல்லூரி மாணவ, மாணவியர்கள் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து
கொண்டார்கள்.