அழிவு பாதையை நோக்கி பெரம்பலூர் மாவட்ட அதிமுக
மாவட்ட அதிமுக முக்கிய மிரமுகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் மீது எடப்பாடி பழனிசாமியிடம் புகார் மனு
பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளர் தமிழ்செல்வன் கட்சி பொறுப்பாளர்கள் நியமனத்தில் கிட்டதட்ட 2 1/2 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது, கட்சியினரை அரவணைத்து செல்லாமல், ஒரு வருக்கொருவர் சண்டையை உண்டு பண்ணி, அதில் தான் குளிர் காய்ந்து வந்தது, பூத் கமிட்டி முறையாக அமைக்காமல், மாவட்ட பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் மோகனிடம் டோஸ் வாங்கியது, எதிர்கட்சியினரிடம் குறிப்பாக திமுக முன்னாள் மத்திய அமைச்சர் இராசாவிடம் கைகோர்த்து செயல்படுவது, கட்சி கூட்டங்களுக்கு கட்சியினரிடம் முறையாக அழைப்பு விடுக்காதது, போன்ற குற்றசாட்டுகளை முன் வைத்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் மீது, பெரம்பலூர் மாவட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு புகார் மனு அளித்தனர்.
- இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காததால், கடந்த மாதம் பெரம்பலூர் மாவட்ட முக்கிய பிரமுகர்கள் ஒன்று திரண்டு பொது செயலாளரிடம் மீண்டும் புகார் மனு அளித்த போது உறுதியாக நடவடிக்கை எடுப்பதாகவும், தனது உதவியாளர் இளங்கோவனிடம் விசாரிக்க சொல்வதாகவும் பெரம்பலூர் மாவட்ட அதிமுகவினரிடமும் கூறி அனுப்பி இருக்கிறார்.
- இதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை மாவட்ட செயலாளார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக மாவட்ட செயலாளர் தமிழ்செல்வனோ நான் சொல்வதை கேட்கும் அளவிற்கு உதவியாளர் இளங்கோவனை சரி செய்து வைத்திருக்கிறேன் என்று அதிமுக அடிமட்ட தொண்டன் வரை தன்னை சந்திக்கும் அனைவரிடமும் வெளிப்படையாக பேசி வருகிறார்.
- இது இவ்வாறிருக்க உச்ச கோபத்தில் இருந்த அதிமுகவினர் சட்டமன்ற கூட்ட தொடர் நடக்கும் தற்போது ஒன்று திரண்டு சென்னை பொது செயலாளர் வீட்டிற்கு சென்று நேற்று புகார் மனு அளித்துள்ளனர்.
- இதன் பிறகாவது உரிய விசாரணை செய்து மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்று விழி பிதுங்கியுள்ளனர்.
சக்கர வியூகம் செய்திகளுக்காக
ஆசிரியர் / வெளியீட்டாளர்
பாண்டியன்.M.V 88705 00000
