தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் – கொள்கை உறுதி மிக்க பொதுவுடமைவாதி’ இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு தமிழக சட்டமன்றம் புகழாரம்
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், கேரள மாநில முன்னாள் முதலமைச்சருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் 2025 ஜூலை 21 அன்று மறைந்த செய்தி அறிந்து, இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொண்ணா துயரமும் கொள்கிறது- பேரவைத் தலைவர் மு.அப்பாவு
விடுதலைப் போராட்ட வீரரும், கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு, ‘ஒரு கொள்கை உறுதிமிக்க பொதுவுடமைவாதி’ என தமிழ்நாடு சட்டமன்றம் புகழாரம் சூட்டியது.
தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் 101 ஆவது வயதில் மறைந்தது குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பேரவைத் தலைவர் மு.அப்பாவு அதுதொடர்பான இரங்கல் குறிப்பை வாசித்தார். மக்கள் மனம் கவர்ந்த தலைவர் அதில், “இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், கேரள மாநில முன்னாள் முதலமைச்சருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் 2025 ஜூலை 21 அன்று மறைந்த செய்தி அறிந்து, இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொண்ணா துயரமும் கொள்கிறது” என்று தெரிவித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு, “கேரள மாநிலத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமையாக திகழ்ந்தவர் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன். கொள்கை உறுதிமிக்க பொதுவுடமைவாதியாகவும் மக்கள் மனம் கவர்ந்த தலைவராகவும் திகழ்ந்தவர். அவரது மறைவால், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள், கேரள மாநில மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது” என்றும் கூறினார். தோழர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.