Sakkraviyugam

July 28, 2026

ஸ்ரீமுனியாண்டி ஆட்டோ ஸ்டாண்ட் சார்பில் சிறப்பு ஆயுத பூஜை வழிபாடு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு ஸ்ரீமுனியாண்டி ஆட்டோ ஸ்டாண்ட் சார்பில் சரஸ்வதி சிலைக்கு சிறப்பு பூஜை

அலங்காநல்லூர்.அக்.02.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முனியாண்டி ஆட்டோ நிலையம் நேற்று ஆயுத பூஜையை முன்னிட்டு, ஆட்டோ ஸ்டாண்ட் சார்பில் அதன் நிர்வாகிகள் கலந்து கொண்டு, அஜந்தா திரையரங்கு வளாகப் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி சிலைக்கு மாலை அணிவித்து பொறி கடலை, சுண்டல், கொழுக்கட்டை, ஆப்பிள், கொய்யாப்பழம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, உள்ளிட்டவைகள் படையல் செய்து வழிபட்டனர். அதற்கு முன்னதாக பிரசித்தி பெற்ற ஸ்ரீ முனியாண்டி கோவிலில் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 40க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு மாலை அணிவித்து அலங்காரம் செய்து அலங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து கேட்டுகடை வரை ஒன்றன்பின் ஒன்றாக வீதி உலா சென்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஆட்டோ சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம்,மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். பின்னர் பொதுமக்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

சக்கர வியூகம் செய்திகளுக்காக

T உதயசூரியன்

Scroll to Top