தஞ்சாவூரில் நடைபெற்ற தொழிற்சங்கத்தின் முக்கிய நிகழ்வுகள், தொழிலாளர் நலனுக்கான உறுதியான நடவடிக்கைகளையும், நினைவேந்தலின் நெகிழ்வையும் ஒருங்கிணைத்த சிறப்பு நாளாக அமைந்தது. சுமார் 250 தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி மூன்று முக்கிய அம்சங்களை கொண்டிருந்ததாக ஜனதா சங்க மாநில பொருளாளர் லூ. ஜேம்ஸ் கென்னடி அவர்கள் தெரிவித்ததாவது:
🕊️ முன்னாள் மாநில தலைவர் சோ. இளங்கோ அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்:
கடந்த ஆண்டு நம்மை விட்டு பிரிந்த நமது தொழிற்சங்க முன்னோடிகள் ஜெபமணி ராஜ், பூபதி ஆகியோருக்கும் கரூர் பொதுக்கூட்ட நிகழ்வில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநில அளவில் தொழிலாளர் நலனுக்காக தன்னலமின்றி உழைத்த சோ. இளங்கோ அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி, அவரின் பணிகளை நினைவுகூரும் உரைகளுடன் நடைபெற்றது.
அவரின் வழிகாட்டுதலால் பல்வேறு மாவட்டங்களில் தொழிலாளர் உரிமைகள் வலுப்பெற்றதைக் குறிப்பிட்டும், அவரது அன்பான உபசரிப்பு மற்றும் பண்புடன் பழகும் பண்பு குறித்தும் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் பகிர்ந்து கொண்டனர். இறுதியில் அவரது துணைவியார் மணிமேகலை அவர்கள் நினைவு பரிசு வழங்கி கௌரவப்படுத்தப்பட்டார்.
🏛️ திருச்சி மற்றும் தஞ்சை மண்டல பொதுக்குழு கூட்டம்: இரு முக்கிய மண்டலங்களுக்கான பொதுக்குழு கூட்டம், மாநில துணைப் பொதுச் செயலாளர் சசாங்கன் அவர்கள் பொறுப்பேற்று நடத்திய கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, தொழிலாளர் பிரச்சனைகள், மற்றும் தீர்வுகள் குறித்து விவாதிக்க அமைந்த ஒரு திறந்த மேடையாக இருந்தது.
மண்டல செயலாளர்கள், உறுப்பினர்கள், மற்றும் புதிய திட்டங்களை முன்வைத்தவர்கள் உரையாற்றினர். வி.சிவக்குமார் மண்டல செயலாளர் திருச்சி மண்டலம் அவர்களும் எம்.கர்ண ராஜ் செயலாளர் திருச்சி பெருநகர் வட்டம் அவர்களும் டி.எடிசன் பொருளாளர் திருச்சி பெருநகர் வட்டம் அவர்களும் மதுரை மண்டல பொறுப்பாளர்களும் இணைந்து பொதுக்குழுவை வழி நடத்தினார்கள்.
பயிற்சி முகாம்கள், நலத்திட்டங்கள், மற்றும் பிரதிநிதி வலுவூட்டல் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
🗳️ மாநில செயற்குழு கூட்டம் – தீர்மானங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள்: கா.ரவி மாநில தலைவர் அவர்கள் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து மாநில அமைப்புச் செயலாளர் முத்துராமன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மாநில அளவில் தொழிற்சங்கத்தின் வளர்ச்சி, அரசியல் நிலைப்பாடுகள், மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாநில நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், மற்றும் ஆலோசகர் குழுவினர் கலந்து கொண்டு, சம்பள உயர்வு, அரசு கோரிக்கைகள், மற்றும் தொழிலாளர் நலன் குறித்து முக்கிய தீர்மானங்களை எடுத்தனர்.
மாநில பொருளாளர் லூ. ஜேம்ஸ் கென்னடி தொழிற்சங்கத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமும் இது போன்ற கூட்டங்களை நடத்துவதற்கும் மிக முக்கியமான தேவை பொருளாதார என்பதை வலியுறுத்தி உறுப்பினர்கள் தரும் சந்தா மூலமாகவும் நன்கொடை மூலமாகவும் மட்டுமே இந்த இயக்கம் நடைபெற முடியும் என்றும் உறுப்பினர்கள் சிரமம் இல்லாமல் சந்தா தொகையை செலுத்துவதற்கு வசதியாக வங்கிகளின் மூலம் தொழிற்சங்க கணக்கிற்கு நேரடியாக செலுத்தும் ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.
அனைத்து விவாதங்களுக்கும் பதில் உரையாற்றினார் மாநில பொதுச் செயலாளர் சு.பாரி அவர்கள்.
நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மதுரை மண்டல நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.
இந்த நிகழ்ச்சிகள் மூன்றும் தொழிலாளர் ஒற்றுமையின் முக்கிய அடையாளங்களாக அமைந்தன எனவும் ஜனதா சங்க மாநில பொருளாளர் லூ . ஜேம்ஸ் கென்னடி அவர்கள் தெரிவித்தார்.


