Sakkraviyugam

April 18, 2026

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்! உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு ! நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் !

ஒட்டன்சத்திரத்தில்
நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்! உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு !

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் கோட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் காசி முருக பிரபு வரவேற்புரையாற்றினார் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்
அர.சக்கரபாணி பேசியதாவது :

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, மற்றும் பல் மருத்துவம் பொது மருத்துவம் ஆயுர்வேதம், எலும்பு மற்றும் மூட்டுவலி நரம்பியல் பிரிவு உள்ளிட்ட 25 – பிரிவுகளை ஒருங்கிணைத்து இந்த முகாமானது நடைபெற்றது. இந்த முகாமில் எல்லா மருத்துவ பிரிவுகளும் ஒருங்கிணைந்து இருப்பதினால் முழு உடல் பரிசோதனை முகாமில் ஆரம்பித்து ஒவ்வொரு மருத்துவ அதிகாரிகள் பிரிவு ரீதியாக இருப்பதினால் அனைத்து சிகிச்சைகளும் முழுமையாக பரிசோதனை பார்க்க முடியும் எனவே பொதுமக்கள் இதை பொறுமையாக இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கலைஞருடைய ஆட்சி காலத்தில் வருமுன் காப்போம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது .அதன் ஒரு பகுதியாக இந்த திட்ட முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் அது போல் உடல் நலம் நன்றாக இருந்தால் தான் நாம் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் என்பதை எடுத்துரைத்து பேசினார் இம்முகாமில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அனிதா திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, வட்டாட்சியர் சஞ்சய் காந்தி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர்கள் ஜோதீஸ்வரன் தர்மராஜ், எஸ்.ஆர்.கே பாலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபு பாண்டியன், காமராஜ் , ஒட்டன்சத்திரம் , நகர் மன்ற தலைவர் திருமலைசாமி துணைத்தலைவர் வெள்ளைச்சாமி ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் சுவேதா, நகராட்சி பொறியாளர் சுப்ரமணியபிரபு, உள்ளிட்ட துறை சார்ந்த மருத்துவ அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் நகராட்சி பணியாளர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள், மேலும் சுமார் 3000-மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Scroll to Top