Sakkraviyugam

April 18, 2026

111 மாணவ, மாணவிகளுக்கு சுமார் ரூ.20.00 இலட்சம் மதிப்பிலான உயர்கல்வி உதவித்தொகை மற்றும் கட்டணச்சலுகை வழங்கப்பட்டன.

‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி
மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மாணவ,
மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன்
உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பள்ளிக்கல்வியை முடித்த மாணவ, மாணவிகள்
அனைவரும் உயர்கல்வி பயிலுவதை உறுதி
செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிப்
படிப்பை முடித்த மாணவ, மாணவிகள்
உயர்கல்வியில் மருத்துவம், பொறியியல், கலை
மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து
படிப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும்
ஆலோசனைகள் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை

அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்,
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற
உறுப்பினர்களின் அறிவுறுத்தலின்பேரில்,
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,
இ.ஆ.ப., அவர்கள் முன்னெடுப்பான
செயல்களின் மூலம் கல்வி மேம்பாட்டுக்காக
பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு
வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் கிராமப்புறங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். ஏராளமான
மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிக்கல்வியை கிராமப்புற பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இம்மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் நோக்கில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ்
‘உயர்வுக்குப்படி – உயர்கல்வி வழிகாட்டிக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு திண்டுக்கல்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் தங்கள் பணிகளை

மேற்கொண்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மாணவச் செல்வங்கள்
உயர்கல்வி படிப்புகள் மற்றும் கல்லூரிகள் தொடர்பான தங்கள் சந்தேகங்கள், தேவையான
விபரங்களை ‘உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை’யின் கட்டணமில்லா தொலைபேசி எண்
18004250047 அல்லது வாட்ஸ்அப் எண் 7598866000 வாயிலாக தொடர்புகொண்டு தகுந்த
ஆலோசனைகள் பெற்று பயனடைந்து வருகின்றனர். ‘உயர்கல்வி வழிகாட்டிக் குழு’
உறுப்பினர்கள் மாணவ, மாணவிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கி வருகின்றனர்.
‘உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை’யின் துணை கொண்டு அவரவருக்கு விருப்பமும், ஆர்வமும்
உள்ள படிப்புகளைத் தேர்ந்தெடுத்து உயர்கல்வியைத் தொடரலாம்.
மேலும், தமிழ்நாடு அரசு, ‘கல்லூரிக் கனவு’ மற்றும் ‘உயர்வுக்குப்படி’ போன்ற
நிகழ்ச்சிகள் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும்
உயர்கல்வியில் சேர்க்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள்
முன்னெடுப்பான செயல்பாட்டின் காரணமாக 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ,
மாணவியருக்காக ‘மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்’ திண்டுக்கல் மாவட்ட ஆட்சியகரத்தில்
நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் வரும் அக்டோபர் மாதம் வரை 15 நாட்களுக்கு
ஒருமுறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வியை நிறைவு செய்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதை உறுதி
செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். மாணவ, மாணவிகள் உயர்கல்வியில்
சேருவதற்கான ஆலோசனைகள், திறன் பயிற்சி ஆலோசனைகள், தேவையான சான்றிதழ்
பெறுவதற்கான வழிமுறைகள், கல்விக் கடனுதவிகள் உள்ளிட்ட அவர்களின் தேவைகளை
நிறைவேற்றுவதற்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது. மாணவ, மாணவிகளின் தேவைகள்,
கோரிக்கைகளை கேட்டறிந்து அது தொடர்பாக விண்ணப்பம் பெற்று துறை
அலுவலர்களுடன் ஆலோசித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.

அதன்படி, ‘மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்’ 28.05.2025, 17.06.2025 மற்றும்
30.07.2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 08.07.2025 அன்று தூய்மைக்
காவலர்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற்றது. இச்சிறப்பு குறைதீர் முகாம்களில்
உயர்கல்வி பயில உதவி மற்றும் ஆலோசனைகள் கோரி பெறப்பட்ட 333 மனுக்கள்
பெறப்பட்டன. அந்த மனுக்களில் பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள் 18 பேர், ஒரு

பெற்றோரை மட்டும் இழந்தவர்கள் 66 பேர் மற்றும் பொருளாதார ரீதியாக மிகவும்
பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் 157 பேர் ஆவர். இம்மனுக்கள் அனைத்தும்
பரிசீலிக்கப்பட்டு, முதல் கட்டமாக 111 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம்,
திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் மூலம் உயர்கல்வி
உதவித்தொகை வழங்கவும், கட்டணச் சலுகை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு,
மொத்தம் 111 மாணவ, மாணவிகளுக்கு சுமார் ரூ.20.00 இலட்சம் மதிப்பிலான உயர் கல்வி
உதவித்தொகை மற்றும் கட்டணச்சலுகை ஆணைகள் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை
அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்களால் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு முகாம்கள் வாயிலாக பயனடைந்த மாணவ, மாணவிகள் தாங்கள் பெற்ற
பயன்களை அகமகிழ்வோடு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சேவுகாரன்பட்டியைச் சேர்ந்த மாணவி ராகிணி தெரிவித்ததாவது:-
எனது பெயர் ராகிணி. நான் சேவுகாரன்பட்டி அரசு
மேல்நிலைப்பள்ளியில் படித்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன்.
எனது பெற்றோர் விவசாய தொழிலாளர்கள். என்னை 12-ஆம்
வகுப்பு வரை படிக்க வைப்பதற்கே மிகவும் சிரமப்பட்டு படிக்க
வைத்தனர். நான் உயர்கல்வி சேர்ந்து படிக்க வேண்டும் என
ஆசைப்பட்டேன். அதற்காக விண்ணப்பித்திருந்தேன். திண்டுக்கல்
காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் எனக்கு உயர்கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. மிகவும்
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த என்னால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலை
இருந்தது. இதனால் எனது உயர்கல்வி கனவு நனவாகுமான என்ற ஏக்கம் ஏற்பட்டது.
அப்போதுதான், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘மாணவர் சிறப்பு குறைதீர்
முகாம்’ நடைபெறுவதை அறிந்து ‘உயர்வுக்குப்படி – உயர்கல்வி வழிகாட்டிக் குழு’
ஆலோசனையின் பேரில் மனு அளித்தேன். தற்போது, எனக்கு கல்விக் கட்டணம் ரூ.14,320
முழுத்தொகையும் உதவித்தொகையாக கிடைத்துள்ளது.
என்னைப்போன்ற ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் உயர்கல்வி கனவை
நனவாக்கிட இதுபோன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்தார்.
இதுகுறித்து நத்தம் பகுதியைச் சேர்ந்த மாணவி பொன்னழகி தெரிவித்ததாவது:-
எனது பெயர் பொன்னழகி. நான் நத்தம் அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி
பெற்றுள்ளேன். எனது பெற்றோர் கூலித்தொழிலாளர்கள்.
அவர்களுடைய குறைந்த வருமானத்தில் என்னை 12-ஆம் வகுப்பு
வரை படிக்க வைத்தனர். நான் உயர்கல்வி பயில விண்ணப்பித்தேன்.
திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் உயர்கல்வி
பயில வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கல்விக் கட்டணம் செலுத்த எனது பெற்றோர் மிகவும்
சிரமப்பட்டனர்.
அப்போதுதான், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘மாணவர் சிறப்பு
குறைதீர் முகாம்’ நடைபெறுவதை அறிந்து ‘உயர்வுக்குப்படி – உயர்கல்வி வழிகாட்டிக் குழு’
ஆலோசனையின் பேரில் மனு அளித்தேன். தற்போது, முதல் செமஸ்டருக்கான கல்விக்
கட்டணம் செலுத்த உதவித்தொகை கிடைத்துள்ள, கட்டணம் செலுத்தப்பட்டு விட்டது.
இதனால் எனது உயர்கல்வி கனவு நனவாகியுள்ளது.
எங்களைப்போன்ற மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவ,
மாணவிகளின் உயர்கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்
அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்தார்.

சிறப்பு குறைதீர் முகாம்

111 மாணவ, மாணவிகளுக்கு சுமார் ரூ.20.00 இலட்சம் மதிப்பிலான உயர்
கல்வி உதவித்தொகை மற்றும் கட்டணச்சலுகை வழங்கப்பட்டன.

Scroll to Top