பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு, பாரதி ஜனதா கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்றம் பொள்ளாச்சி கிழக்கு மண்டல் ஒன்றியம் சார்பாக, இன்டர்நேஷனல் யூனியன் ஆப் கராத்தே ஆர்கனைசஸ் இன் இந்தியா இணைந்து நடத்திய மாபெரும் கராத்தே போட்டி. இடம் தாரணி மஹால் சுந்தரா கவுண்டனூர்.

ஆர் கே ஆர் ஸ்கூல் கொடிங்கியம் சுவாதிக் சின்னேரி பாளையம் ஸ்கூல்
ஆர் ஜி எம் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் பெதப்பம்பட்டி
குருஜி வித்யா மந்திர் குண்டடம்
ஆர் ஜி எம் இன்டர்நேஷனல் ஸ்கூல்
கே ஜி இன்டர்நேஷனல் ஸ்கூல்
ராகல் பாவி ஆர் ஜி எம் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் மானூர் பாளையம்
வாகீஸ்வரி ஹையர் செகண்டரி ஸ்கூல் மணல்மேடு
கந்தசாமி ஹையர் செகண்டரி ஸ்கூல் கோவிந்தாபுரம்
ஸ்ரீ லட்சுமி வித்யா மந்திர் மீனாட்சிபுரம் மற்றும் சோமாரப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள்
சுமார் 600க்கு மேற்பட்டோர் போட்டியிலே பங்கேற்று வெற்றி பெற்று பரிசுகளை தட்டி சென்றனர்.
இவ்விழாவிலே சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம் ஜி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் முனைவர் மோகனப்பிரியா சரவணன் ஜி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி மற்றும் விஜயராகவன் மாவட்ட செயலாளர் வடுகநாதன் ஜி ஜெகநாதன் ஜி இவ்விழாவினை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அளித்தனர் சிறப்பான முறையில் முன்னின்று ஏற்பாடு செய்திருந்த உடுமலை சட்டமன்றம் பொள்ளாச்சி கிழக்கு மண்டல தலைவர் கௌதம் லிங்கராஜ் அவர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் சிறப்பான முறையில் போட்டியினை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தனர்