மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள்
இன்று (30.08.2025) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் “coffee with
collector” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி வாயிலாக அரசு பள்ளியில் பயின்று மருத்துவம்
மற்றும் பல் மருத்துவம் பயின்று வரும் 30 முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுடன்
கலந்துரையாடினார்கள்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளியில் பயிலும் மாணவர்களுடைய
உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி
தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி,
வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி,
அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி
இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை
அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி,
கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை
உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய
நோக்கமாகும்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவ மாணவ,
மாணவியர்களிடம் தமிழ்நாடு மருத்துவ உட்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக திகழ்ந்து
வருகிறது. தமிழ்நாட்டில் அதிக மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ படிப்புக்கான
இடங்களும் அதிக அளவில் உள்ளது. மாணவர்களாகிய நீங்கள் மருத்துவக்
உட்கட்டமைப்புகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுடன் கல்வி,
பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில்
மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு
பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து
கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, மூன்றாவது முறையாக கலந்துரையாடல்
நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு பாடத்தையும் நன்கு புரிந்து படிக்க வேண்டும். கல்லூரி பேராசிரியர்கள்
மற்றும் மேல்நிலை ஆண்டுகளில் பயிலும் மாணவர்களிடம் சந்தேகங்களை கேட்டு தெளிபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும், விளையாட்டு, யோகா, புத்தகம் வாசிப்பு
என்பது போன்றவை நம்மை உற்சாகமாக வைக்கும். இதில் புத்தக வாசிப்பின் காரணமாக
நமது படிப்பு திறமை மேம்படும்.. தற்போதைய படிப்பு தான் பின்னர் நமக்கு கை
கொடுக்கும். தமிழ்மொழி பயின்ற மாணவர்களாகிய நீங்கள் மருத்துவம் சார்ந்த கிரேக்கம்
அல்லது இலத்தீன் சொற்களை புரிந்து படிக்க வேண்டும். மாணவர்கள் குழுவாக இணைந்து
புரிந்து படிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு தலைப்புகளை
தேர்தெடுத்து முழுமையாக பயின்று மற்ற மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். குறிப்பாக,
மருத்துவம் பயிலும் மாணவர்கள் இது போன்று குழுவாக இணைந்து படிப்பதன் மூலம்
எளிமையாக படிக்க முடியும். இன்றைய உலகத்தில் சமூக ஊடகத்தின் தாக்கம் அதிகமாக
உள்ளது அவற்றை சற்று ஒதுக்கி விட்டு அதிகமாக படிக்க வேண்டும். படிக்க படிக்க
படிக்கும் திறன் அதிகரிக்கும். படிப்பில் கடின உழைப்பை செலுத்த வேண்டும்
.விடாமுயற்சியும் கடின உழைப்பும் மிகப்பெரிய வெற்றியைத் தரும். என மாவட்ட
ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
தொடர்ந்து, மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயிலும் முதலாம் ஆண்டு 30
மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவ அங்கிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி
நன்றாக படிக்க வேண்டும் என வாழ்த்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ்
நாரணவரே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த சந்திப்பில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து
கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, தன்னம்பிக்கை, ஊக்கம்
அளிப்பதாகவும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஆகிய மாவட்ட ஆட்சி
தலைவர் அவர்களின் தெளிவான விடைகளை நாங்களும் கேட்டு அறிந்து கொண்டோம்
என்றும், இந்த ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள்
தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) காளிமுத்து,
உதவி திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளி கல்வி) அண்ணாதுரை, ரோட்டரி சங்க
நிர்வாகிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்