புரோக்கர் பிடியில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அனிதா..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கடந்த சில மாதங்களாக பணியாற்றி வரும், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அனிதா வாகன ஓட்டிகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற வருபவர்களிடமும், முதியவர்களையும் மரியாதை குறைவாகவும், ஒருமையிலும் பேசுவதாக பல குற்றச்சாட்டு ஏழுந்த வண்ணம் உள்ளது. மேலும் முதியவர்களையும் பெண்ககளையும் அதிக நேரம் நிற்க வைத்து அளக்களிப்பதும், தண்ணீர் கேட்டால் கூட, அவமரியாதையாக தண்ணீர் எல்லாம் கொண்டாரமாட்டியா வெளிய போ என்று மரியாதை குறைவாக பேசி வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் நேர்மையான அதிகாரி போல் பாவனை செய்து கொண்டு குறிப்பிட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி அல் ரயான் எனப்படும் பள்ளி உரிமையாளர் ரிஸ்வான் உதவியுடன், புரோக்கர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மற்றும் ஏராளமானவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும், அலுவலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும் இவர் அறந்தாங்கியில் இருக்கும் பொழுது அல் ரயான் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் உறவினர் போல் நம்பிக்கையான ஆளாக இருப்பதால், அவரை வைத்துக் கொண்டே அனைத்து காரியங்களையும் செய்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே 2 துறை சார்ந்த நடவடிக்கையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உயர்மட்ட அதிகாரிகளை மதிப்பதே கிடையாது என்றும் சமூக அலுவலர் கூறினார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், வட்டார போக்குவரத்து துணை ஆணையர் மற்றும் இணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போல் முதியவர்களை மற்றும் உயர் அதிகாரிகளை மதிக்க தவறும் இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக அலுவலர் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். இது போன்ற தகவல்கள் சிவகங்கை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பணன் அவர்களிடம் கிடைக்கப்பெற்றதுடன், பொதுமக்கள் வரிப்பணத்தில் தான் நாம் ஊதியம் வாங்குகிறோம் தங்களின் தகப்பனாரும் இதே வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றியவர் தானே என்று. அவர் இரண்டு முறை கண்டித்ததாகவும் தெரிய வருகிறது. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது நான் இப்படித்தான் இருப்பேன் எத்தனையோ மாற்றங்களை பார்த்து விட்டேன் என்றும் கூறியதாக அலுவலகத்தில் முணுமுணுத்ததாகவும் தெரிய வருகிறது.