டெல்லியில் தலைமையிடமாகக் கொண்ட அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை என்ற அமைப்பு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு உதவுகிறது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் மாநில தலைமையாக செயல்படுகிற இந்த அமைப்பின் தேசிய தலைவர் குப்புசாமி, அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவையின் மாநில தலைவர் அய்யாசாமி அவர்கள் ஆலோசனைப் படி, இன்று நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவையின் நீலகிரி மாவட்ட தலைவராக மோகன், நீலகிரி மாவட்ட செயலாளராக பாபு தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு திருப்பூர் மாவட்ட தலைவர் ரஜினிகுமார் ஆலோசனைகளையும் அமைப்பின் அடையாள அட்டைகளையும் வழங்கினார்.
