“பழனி தேவஸ்தான பஞ்சாமிர்தம்” – விற்பனையில் வரலாற்று சாதனை…
ஒரே நாளில் ரூ.75.53 லட்சத்துக்கு விற்பனை – விற்பனை மையங்கள் 24 * 7 செயல்படும் – இணை ஆணையர் மாரிமுத்து தகவல்

- திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் சென்ற டிசம்பர் 26-ம் தேதி ஒருநாள் மட்டும் ரூ.75.53 லட்சத்துக்கு அபிஷேக பஞ்சாமிர்தம் விற்பனையானது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழநி தேவஸ்தானம் சார்பில் சுமார் 15 நிரந்தர பஞ்சாமிர்தம் விற்பனை மையங்கள் மற்றும் ஒரு தற்காலிக பஞ்சாமிர்த விற்பனை மையம் 22 திறக்கப்பட்டுள்ளது. மேலும், தேவஸ்தானம் சார்பில் அபிஷேக பஞ்சாமிர்தம் 470 கிராம் டப்பா ரூ.40-க்கும், டின் ரூ.45-க்கும், 200 கிராம் டப்பா ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- சாதாரண நாட்களில் தினமும் 20 ஆயிரம் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் விற்பனையாகும். சபரிமலை ஐயப்ப சீசன், தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக் காலங்களில் தினமும் 1.50 லட்சம் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் விற்பனையாகும்.
- தற்போது சபரிமலை ஐயப்ப சீசன், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் பக்தர்களுக்கு எந்நேரமும் பஞ்சாமிர்தம் கிடைக்கும் வகையில் தேவஸ்தான பஞ்சாமிர்த விற்பனை மையங்கள் 24 மணி நேரமும் திறந்தே வைக்கப்பட்டுள்ளன.
பக்தர்களின் வசதிக்காக, மலைக்கோயில், கிரிவலப்பாதை உட்பட 15 இடங்களில் பஞ்சாமிர்தம் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சபரிமலை ஐயப்ப சீசனை முன்னிட்டு, அதிகபட்சமாக 2025 டிச.26-ம் தேதி ஒரு நாள் மட்டும் ரூ.75 லட்சத்து 53 ஆயிரத்து 780-க்கு பஞ்சாமிர்தம் விற்பனையாகி முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
- பழநி முருகன் கோயில் வரலாற்றிலேயே, ஒரே ஒரு நாளில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு பஞ்சாமிர்தம் விற்பனையான நாட்களாக மேற்கண்ட 5 நாட்கள் இடம் பிடித்துள்ளன என்று திருக்கோவிலின் இணை ஆணையர் மாரிமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் கோவிலின் இணை ஆணையர் அவர்கள் தெரிவிக்கையில் பழநி தேவஸ்தானம் சார்பில், சுகாதார முறையில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் தரமாகவும், சுவையாகவும் இருப்பதாலும் பக்தர்கள் நலன் கருதி லாப நோக்கம் இல்லாமல், உற்பத்தி விலைக்கே வழங்கப்படுவதாலும், பக்தர்களுக்கு கூடுதல் இடங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக அதிக அளவில் விற்பனை ஆகி வருவது குறிப்பிடதக்கது.
மேலும் திருக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் உறுப்பினர்கள் கோவிலின் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அதிகாரிகள் தினந்தோறும் பஞ்சாமிர்தம் விற்பனையாகும் மையத்தை ஆய்வு செய்து ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி, வரும் பக்தர்களுக்கு சிரமம் இன்றி தேவைகளை நிறைவேற்றுவதால் இந்த சாதனைக்கு ஒரு முக்கிய காரணம் என வரும் பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.
