Sakkraviyugam

September 11, 2025

பழனியில் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு ரிப்போர்டர் சங்கத்தின் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு நன்றி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அமர பூண்டி பள்ளிக்கூடத்தான் வலசு பிரிவு வடக்கு தெருவில், அனைவருக்கும் பொதுவான தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தொட்டியில் மணியம்மாள் மற்றும் முத்துலட்சுமி தர்மராஜ் சின்ராஜ் ஆகிய இவர்கள் மட்டும் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு, அந்த பகுதியில் வசிக்கும் மற்ற மக்களுக்கு தண்ணீர் விடுவதில்லை. இதை தட்டி கேட்ட பத்திரிக்கையாளர் மாரிமுத்து மற்றும் அவரது மனைவி கஸ்தூரியை, மணியம்மாள், முத்துலட்சுமி, சின்ராஜ், தர்மராஜ், இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர்களுக்கு வீடு இல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஒரு கவர்மெண்ட் வேலையில் இருப்பவருக்கு எப்படி நீங்கள் 11 பிளாட் இடம் கொடுக்கலாம் என்று பத்திரிக்கையாளர் மாரிமுத்து சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் செயலை வெளிக்கொண்டு வந்து, அமர பூண்டி விஏஓ அலுவலகத்தில் மனு கொடுத்தும், காவல் நிலையத்தில் புகார் அளித்ததை மணியம்மாள் முத்துலட்சுமி மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மனதில் வைத்துக்கொண்டு அனைவருக்கும் பொதுவான தண்ணீர் தொட்டியில் பத்திரிக்கையாளர் மாரிமுத்து மற்றும் அவரது மனைவியை தண்ணீர் பிடிக்க விடாமல் மணியம்மாள் மற்றும் முத்துலட்சுமி என்பவர் ஆதரவாளர்களுக்கு மட்டும் தண்ணீர் புடிக்கச் சொல்லி தண்ணீர் பிடிக்க சென்ற மாரிமுத்து மற்றும் அவரது மனைவியை, மணியம்மாள். மற்றும் முத்துலட்சுமி. ஆகியோரின் தூண்டுதலில் காரணமாக மாரிமுத்து, கஸ்தூரி ஆகிய இருவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தர்மராஜ், மற்றும் தர்மராஜ் மகன்கள் மூன்று பேர் மற்றும் சின்னராஜ் ஆகிய இவர்கள் சேர்ந்து இரும்பு கம்பிகளால் மாரிமுத்து மற்றும் அவரது மனைவியை முகம்,முதுகு, இடுப்பு, கை ஆகிய பகுதிகளில் பலமாக தாக்கியும், வீடியோ எடுத்த இரண்டு செல்போன்களை பிடுங்கிக் அடித்து நொறுக்கிவிட்டனர். மாரிமுத்துவின் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினர்.

தகவல் அறிந்து வந்த ஆயக்குடி காவல் சார்பு ஆய்வாளர் ஆனந்த் அவர்கள் காயம் அடைந்த மாரிமுத்து மற்றும் கஸ்தூரி இருவரையும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் மாரிமுத்து அவரது மனைவியை தாக்கப்பட்டவர்கள் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு ரிப்போர்ட் சங்கத்தின் மூலமாக மாநில தலைவர் எஸ்.இளங்கோ அவர்கள் தலைமையில் கோரிக்கை வைக்கப்பட்டது. விரைந்து நடவடிக்கை எடுத்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களுக்கும், பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் அவர்களுக்கும் ஆயக்குடி காவல் சார்பு ஆய்வாளர் ஆனந்த் அவர்களுக்கும் தமிழ்நாடு ரிப்போர்ட் சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Scroll to Top