Sakkraviyugam

September 11, 2026

கல் குவாரிகளில் ஆய்வு – திருப்பூர் காங்கேயம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே
இ.ஆ.ப.,அவர்கள் (12.09.2025) திருப்பூர் மாவட்டம், காங்கேயம்
வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கனிம இருப்பு கிடங்குகளில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்கள்.


மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
இத்திட்டப்பணிகள் முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு ஆய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், கணபதிபாளையம், சிவன்மலை, குட்டப்பாளையம், கம்பிளியம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பகுதிகளில் கனிம இருப்பு கிடங்குகளில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே இ.ஆ..ப, அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின் போது, உதவி இயக்குநர் (கனிம வளம்) பிரசாத், காங்கேயம் வட்டாட்சியர் மோகனன் மற்றும் துறை சாரந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Scroll to Top