Sakkraviyugam

April 18, 2026

அரியூர் கிராமத்தில் டியூக் லயன்ஸ் சங்கம் மற்றும் லியோ லைஃப் டிரஸ்ட் இணைந்து நடத்திய இலவச மருத்துவம்

அரியூர் கிராமத்தில் டியூக் லயன்ஸ் சங்கம் மற்றும் லியோ லைஃப் டிரஸ்ட் இணைந்து நடத்திய இலவச மருத்துவம்

ஆரோக்கியமே செல்வம்” (மெகா மருத்துவ முகாம்) மற்றும் “வாசிப்பை நேசிப்போம்” (மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திட்டம்) என இரு தலைப்புகளில் சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மேற்கு ஒன்றியம் அரியூர் கிராமத்தில் மதுரை டியூக் லயன்ஸ் சங்கத்தின் சமூகச் சேவை நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பு

  • இலவச மருத்துவ முகாம், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள் வழங்கப்பட்டன.டியூக் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாமும்,நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சிறப்பித்தவர் நமது மாண்புமிகு ஆளுநர் லயன் செல்வம், ஸ்டாலின் ஆரோக்கியராஜ், சிறப்பு விருந்தினராக கலந்து கொன்டு சிறப்பித்தார்.
  • மருத்துவ சேவைகள் குரு மருத்துவமனை மூச்சுத் திணறல், நீரிழிவு மற்றும் உடல் பரிசோதனை ஹர்ஷிணி மருத்துவமனை – காது, மூக்கு, தொண்டை பரிசோதனை ப்ரீதிகா கண் மருத்துவமனை – கண் பார்வை பரிசோதனை மற்றும் கண் நோய் கண்டறிதல்
  • நிதிலன் ஹோமியோ கிளினிக் – பொதுவான நோய்களுக்கு ஹோமியோபதி மருத்துவம். பொதுமக்களுக்கு இலவச ஆலோசனைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்பட்டன.
  • கல்வி உதவி
  • 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில்,உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி தலைவர் லயன் சிவராமன், தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பு செயலாளர் மதவன், பாலவைஷ்ணவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் அரியூர் லியோ லைஃப் டிரஸ்ட் உரிமையாளர்கள் ரமேஷ், அருண், ஆகியோர் இணைந்து, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தவும், முழுமையான ஆதரவு அளித்த டாக்டர் ராம்ஜி மற்றும் அவரின் சகோதரர் (இவரும் மருத்துவர்) அவர்களுக்கு மதுரை டியூக் லயன்ஸ் சங்கம் சார்பில் இதயம் கனிந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பங்கேற்பாளர்கள் உறுப்பினர்கள் லயன் விக்னேஷ், பிரகாஷ்ராஜ், கார்த்திக்குமார்.
  • நவீன்ராஜ், ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள் லயன்ஸ் சங்க செயலாளர் மாதவன்,நன்றி கூறினார்

சக்கர வியூகம்

செய்திகளுக்காக

T. உதயசூரியன்

Scroll to Top