Sakkraviyugam

April 18, 2026

ED ரைடு -அச்சம் தெளிந்து களமிறங்கி உள்ள ரெய்டு தொடருமா? தொடராதா? பொதுமக்கள் கேள்வி!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட சி ஆர் பி எப் வீரர்கள் உதவியுடன் ஐந்து அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளர் ஐ பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட சி ஆர் பி எப் வீரர்கள் உதவியுடன் ஐந்து அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

மதுரையில் உள்ள அமலாக்கத் துறையின் துணை மண்டல அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்ட அதிகாரி திவாரி, டிசம்பர் 1, 2023 அன்று தமிழக அரசு அதிகாரி ஒருவரிடமிருந்து ரூ.20 லட்சம் லஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திவாரி லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டதாகவும், வழக்கு விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

அதிகாரி அங்கீத் திவாரி லஞ்சம் வாங்கி சிறை சென்ற நிலையில், அச்சத்துடன் இருந்த அமலாக்கத்துறை, அச்சம் தெளிந்து திண்டுக்கல்லில் களமிறங்கி உள்ளனர் என பொதுமக்கள் கருதுகின்றனர். மேலும் அடுத்தும் இந்த ரைடு தொடருமா அல்லது தொடராதா என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

வேடசந்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதியில் ஆய்வுக்கு அதிகாரிகள் வருவார்களா?? என சில முக்கிய பிரமுகர்கள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் சமூக வளைதலத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Scroll to Top