
புதுடெல்லியில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களை, மத்திய இணையமைச்சர் L முருகன் அவர்களுடன் அண்ணாமலை சந்திப்பின்போது அவர்கள் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையிலான தலைமையின் கீழ், கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டிருப்பதற்கு, எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.
இந்தச் சந்திப்பில், தமிழக பாஜக திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் KCMB சீனிவாசன் அவர்கள் உடனிருந்தார்.
மத்திய அமைச்சர் அவர்களிடம், நமது விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கிராம மக்கள் சார்பாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் திட்டமிடப்பட்டுள்ள சீரமைப்புகளை, பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு மறுபரிசீலனை செய்ய, தாழ்மையுடன் கோரிக்கை வைத்தோம்.
தேசிய நெடுஞ்சாலை 81 ல் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி பணிகள் மேற்கொண்டால், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், நாரணபுரம், மாதப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவில் உள்ள பல்லடம் நகராட்சி நகர்ப்புற எல்லையின் 5, 6 மற்றும் 7 ஆகிய வார்டுகள் உள்ளிட்ட பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின்றன.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களிடம், இவை குறித்த பொதுமக்களின் கவலைகளைத் தெரிவித்தபோது, அவர் மிகுந்த பொறுமையுடன் அனைத்தையும் கேட்டும் கொண்டார். மேலும் பொதுமக்களின் நெடுஞ்சாலை மறுசீரமைப்பு கோரிக்கை தொடர்பாக மறுஆய்வு செய்து பதிலளிப்பதாக உறுதியளித்திருக்கிறார் என அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்