கண்டா வரச் சொல்லுங்க.. திருப்பூர் கலெக்டரை கையோடு கூட்டி வாருங்க
“நல்லாற்றை கவனிக்க நாதியில்லை” – சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆவேசம்
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக எந்த வித அனுமதியும் பெறாமல் நல்லாற்றின் குறுக்கே கட்டிடங்கள் கட்டுவது எந்த வகை நியாயம்
- திருமுருகன் பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடந்த ஓராண்டுக்கு முன்பாக, பூண்டி நல்லாற்றை தூர்வாரி சுத்தம் செய்து தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை ஆகியோருக்கு மனு வழங்கப்பட்டது.
- அந்த மனுவிற்கு பதில் அனுப்பிய பொது பணித்துறை அதிகாரிகள், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், போதிய நிதி ஆதாரங்கள் உருவாக்கப்பட்டவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
- அதன் பிறகு பலமுறை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை தூர் வாருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- இதற்கிடையில் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றவேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
- இதனையடுத்து பூண்டி அனணப்புதூர் மற்றும் செல்வார் டிரம்மர் கோவில் வடபுறம் குடியிருந்த குடிசை வீடுகள் அனைத்தும் அகற்றப்பட்டது.
- குடிசைகளைக்கூட நீர் வழிப் பாதை ஆக்கிரமிப்பு என்று அகற்றி விட்டு தற்போது நகராட்சி நிர்வாகம் நல்லாற்றின் குறுக்கே கிட்டத்தட்ட சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்ய தொட்டி கட்ட, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக பொதுப்பணித்துறையிடமோ, நீர்வளத்துறையிடமோ, தமிழக அரசிடமோ எந்த வித விதமான அனுமதியும் பெறாமல் கட்டிடங்கள் கட்டுவது எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை.
- சிபிஎம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது பூண்டி நகராட்சி கமிஷனர் கட்டிடங்கள் கட்ட அனுமதி வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளதன் மூலம், அரசின் எந்த அனுமதியும் பெறாமல் சுமார் 15 கோடி ருபாய் மதிப்பிலான திட்டம் நடைபெற்றுக்கொண்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அவர்கள் இதனை நேரடி ஆய்வு செய்து, நல்லாற்றைக் காப்பாற்ற வழிவகை செய்ய வேண்டும் என்பது அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது.


