Sakkraviyugam

April 16, 2026

எந்த நீதிமன்றத்தின் மீது தீ வைத்தார்களோ அந்த நீதிமன்றத்திலிருந்து ஒருவரை தங்களது நம்பிக்கைக்காக தேர்வு செய்துள்ளனர்.

எந்த நீதிமன்றத்தின் மீது தீ வைத்தார்களோ அந்த நீதிமன்றத்திலிருந்து ஒருவரை தங்களது நம்பிக்கைக்காக தேர்வு செய்துள்ளனர்.

நேபாளத்தில் சர்மாஒலி தலைமையிலான அரசு நடைபெற்று வந்தது. நேபாள அரசு பொது மக்கள் மீது எந்தவித அக்கறையும் கொள்ளாமல், அரசு பதவிவகிக்கும் அணைத்து அரசியல் வாதிகளும், மக்களின் வறுமையை பற்றி கவலை கொள்ளாமல் தாங்கள் வகிக்கும் பதவியின் மூலம் பிரதமர், அமைச்சர் உள்ளிட்ட அணைவரும் அவர்களது வாரிசுகளும் ஆடம்பரமான சுப போக வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

  • இதனால் நாடு முழுவதும் வறுமையும், ஊழலும் புரையோடி கிடந்துள்ளது. அரசின் மீது பெரும் ஆத்திரம் அடைந்த ஜன்சின்தலைமுறையினரான மாணவர்களும், இளைஞர்களும், அரசுக்கு எதிரான ஜனநாயகரீதியான போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போது தனது தவறை உணராத நேபாள அரசு போராட்டத்தினை மலுங்கடிப்பதற்காகவும், வீரியத்தை குறைப்பதற்காகவும் வாட்ஸ்ஆப், முகநுால், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களையும், சமூக ஊடகங்களையும் முடக்கும் நடவடிக்கையை நேபாள மேற்கொண்டது.
  • இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள், மக்கள் மன்றங்கள், முன்னாள் இந்நாள் அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளையும் தீ வைத்து சேதப்படுத்தி பெரும்தாக்குதலுக்கு உள்ளாக்கினர். இந்த தாக்குதலுக்கு நீதிமன்றமும் இறையானது. போராட்டத்தை கட்டுப்படுத்த இயலாத நேபாள பிரதமர் சர்மாஒலி தனது பிரதமர் பதவியைவிட்டு விலகினார்.
  • அதன் பின்னர் போராட்டக்காரர்கள் புதிய இடைக்கால அரசை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். இடைக்கால பிரதமருக்கான தேர்வு பற்றிய ஆலோசனையில் பல முக்கிய நபர்களின் பெயர் பரிசீலனையில் இருந்தபோது இறுதியாக மாணவர்களும், இளைஞர்களும் நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுசீலாகார்கிலை தேர்வு செய்தனர். அரசு சுசீலாகார்கில் தேர்வு செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம், அவர் பதவி வகித்த காலங்களில் நேர்மையான வகையில் தீர்ப்புகள் வழங்கியதும், ஊழக்கு எதிராக அவர் மேற்கொண்ட மிக முக்கிய நடவடிக்கைகளும், அதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
  • போராட்டக்காரர்கள் எந்த நீதிமன்றத்தின் மீது தீ வைத்தார்களோ அந்த நீதிமன்றத்திலிருந்து ஒருவரை தங்களது நம்பிக்கைக்காக தேர்வு செய்துள்ளனர். ஆனால் இந்தியாவில் நிகழ்காலமாக நீதிபதிகளின் நடவடிக்கைகள் விவாதப்பொருளாக மாறியிருக்கின்றதை நாம் பார்க்க முடிகிறது.

டெல்லியில் நீதிபதியின் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணக்குவியல் எடுக்கப்படுகிறது. நீதிபதியின் தீர்ப்புகளில் பாரபட்சம் இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி பகத்சிங் குற்றச்சாட்டு வைத்ததை நாம் அறிவோம். அதிலும் குறிப்பாக உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றவுடன் மத்திய, மாநில அரசுகள் பரிந்துறைக்கும் பதவிகளில் பணியாற்றுவதை நாம் பார்க்கின்றோம். அதுவும்கூட விவாதப் பொருளாக இன்றைக்கு மாறி இருக்கின்றது.

அணைத்து மக்களின் இறுதி நம்பிக்கை நீதிமன்றமே.. அது மீது எழுப்பும் சந்தேகம் ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிடும். வண்முறையாளர்கள் நீதிமன்றத்தின் மீது வைக்கும் நம்பிக்கையானது வன்முறையை அறவே ஒழித்து வலிமையான ஜனநாயகத்திற்கும், சமத்துவத்திற்கும் வித்திடும்.

வே.சு.மணிகண்டன் வழக்கறிஞர் நிலக்கோட்டை

Scroll to Top