Sakkraviyugam

April 18, 2026

அம்பேத்கார் சிலை குப்பை வண்டியில் ஏற்றிய செயல் – இந்திய குடியரசு கட்சி பாலவீரவேல் கண்டனம்

வடலூரில் சட்ட மாமேதை அம்பேத்கார் சிலை குப்பை வண்டியில் ஏற்றியசெயல் – இந்திய குடியரசு கட்சி பாலவீரவேல் கண்டனம்

இந்திய குடியரசு கட்சி கடலூர் மாவட்ட தலைவர் பாலவீரவேல் அறிக்கை :


சாலைவிரிவாக்கம் என்றபெயரில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அனுமதிபெறாமல், கடலூர்மாவட்டம். வடலூர் நான்கு முனை சந்திப்பில் பாபா சாகேப் .டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியாரின் திருஉருவசிலை உள்ளது. இச்சிலை கிட்டதட்ட 1993 ஆம் ஆண்டிலிருந்து உள்ளது. சட்டமாமேதை டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலையை பூர்விக தமிழர்களான ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோரின் சமுக நல்லிணகத்திற்காக பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனத்தலைவர் இராமதாஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இத்திருஉருவசிலையை நேற்று நள்ளிரவில் ஜேஜிபி இயந்திரம் கொண்டு அகற்றி நகராட்சி குப்பை வண்டியில் ஏற்றிய செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது. இச்செயலை செய்தவர்களை தமிழக அரசும், .மாவட்ட நிர்வாகமும் கண்டிக்கவேண்டும். மேலும் வெரும் கண் துடைப்புக்காக வென்கலம் சிலை வைப்போம் என்று பிரச்சனைக்கு இப்போது முற்று புள்ளி வைப்பதாக கூறக்கூடாது. போர்கால அடிப்படையில் உடனடியாக புதியபேருந்துநிலையம் நுழைவாயிலில் இரு பெரும்தலைவர்களின் திருஉருவ சிலையை நிறுவவேண்டும் காலம்கடத்தினால் எங்கள்கட்சியின் மாநிலதலைவரும், முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். செ.கு.தமிழரசன் ஆணைக்கிணங்க. வடலூரில் இந்தியகுடியரசுகட்சி சார்பாக போராட்டம் நடத்துவோம் என இந்தியகுடியரசுகட்சி கடலூர்மாவட்டதலைவர் பாலவீரவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சக்கர வியூகம் செய்திகளுக்காக

பாண்டியன்
ஆசிரியர் / வெளியீட்டாளர்

Scroll to Top