Sakkraviyugam

April 18, 2026

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் சேனாதிபதியாக தன்னை நினைத்துக் கொண்டு செயல்பட்டு வரும் செவிலியர் தேவசேனா..!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் தேவசேனா என்பவர் செவிலியர் சங்க செயலாளராக பணியாற்றிக் கொள்வதாக தன்னைத் தானே தலைவி என்றும், நான் தான் டீன் என்றும் தன்னை நினைத்துக் கொண்டு, என்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று தனக்குத்தானே புகழாரம் சூடிக்கொண்டு செயல்பட்டு வரும் தேவசேனா, அனைத்து செவிலியர்களையும் அடிமைகள் போல் பாவிப்பது மற்றும் தற்காலிக செவிலியர்களை அசிங்கமாக பேசுவது, ஜாதி மத ரீதியாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக செவிலியர்கள் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம், ஊர் விட்டு ஊர் செல்ல செவிலியர்களுக்கு 50.000 முதல் 1லட்சம் வரை பணம் வாங்குவதாகவும், மேல்மட்டம் வரை எனக்கு ஆள் இருக்கிறார்கள், நான் நினைத்தால் டீணையே மாற்றுவேன் என்று தற்பெருமை கூறிக்கொண்டு அனைவரையுமே மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. மேலும் துப்புரவு பணியாளர்களை தனது வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்தி, வற்புறுத்தி வேலை வாங்குவது, அவ்வாறு வேலை செய்ய மறுத்தாலோ அல்லது வர மறுத்தாலோ உன்னை வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று மிரட்டி வருவதாக துப்புரவு பணியாளர் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது போன்ற மனித உரிமை மீறியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவரிடம் கேட்ட பொழுது, அவ்வாறு நடந்தால் நாங்கள் கண்டிக்கிறோம் என்று மழுப்பலான தகவலை தெரிவித்தனர்.

Scroll to Top