Sakkraviyugam

April 22, 2026

அரியலூர் ஏடி பஞ்சாயத்து! பழனிசாமியின் பகல் கொள்ளை…

அரியலூர் ஏடி பஞ்சாயத்து பழனிசாமியின் பகல் கொள்ளை…

அரியலூர் மாவட்டத்தில் வெண்டிலேட்டர் வாங்கியதிலும், குப்பை வண்டிகள் வாங்கியதிலும் அரியலூர் உதவி இயக்குனர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிச்சாமி கோடிகளில் பாக்கெட்டை நிரப்பி விட்டார் என்று அரியலூர் ஆட்சியராக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில்,

இது சம்பந்தமாக விசாரித்த போது, வெண்டிலேட்டர்கள் 210 பஞ்சாயத்துகளுக்கும் தலா ரூ.50,000 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 50 லட்சத்தை பழனிச்சாமி சுருட்டி விட்டாராம்.

குப்பை வண்டிகள் 240 வாங்கியதில், ஒரு குப்பை வண்டிக்கு ரூ. 1,80,000 ம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த போது, உதவி இயக்குனரோ ரூ. 2,80,000 என்று பில் போட்டு சில கோடிகளை பார்த்து விட்டாராம்.

இதைவிட முக்கியமான தகவல் கிடைத்தது என்னவென்றால், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், எஸ்டேட் வாங்கி இருப்பதாக மாவட்ட ஆட்சியரக வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக மேலும் பல தகவல்களை திரட்டி கொண்டிருக்கிறோம்.

Scroll to Top