Sakkraviyugam

September 11, 2026

திசையன்விளை பேரூராட்சியில் சிறப்பு வார்டு சபைக் கூட்டம். மாவட்ட திமுக மகளிர் அணி தலைவி கமலா நேரு தலைமையில் நடந்தது.

திசையன்விளை பேரூராட்சியில் சிறப்பு வார்டு சபைக் கூட்டம்.
மாவட்ட திமுக மகளிர் அணி தலைவி கமலா நேரு தலைமையில் நடந்தது.

  • திசையன்விளை.அக்.29
  • திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சி 6 வது வார்டில் சிற‌ப்பு கிராம சபைக் கூட்டம் உடன்குடி ரோடு தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி கவுன்சிலர் மற்றும் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி தலைவர் கமலா நேரு தலைமை தாங்கினர். பேரூராட்சி அலுவலர் சிவா மற்றும் முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கே.டி.பி.ராஜன், செல்லப்பா ஆசிரியர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜேக்கப் மனோகர், பால்ராஜ் ஆசிரியர், னப்பிரகாசம்,சேவியர்,அமிர்தலிங்கம்,சாரதா பிரபாகர், வசந்த், சித்ரா, மகாலிங்கம், ரகுபதி, சர்மிளா, அலுவலக பணியாளர்கள் விஜயகுமார், கனேசன், மகேஷ் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு வார்டுக்கு தேவையான வசதிகள் குறித்து கருத்து தெரிவி்த்தனர். நிறைவில் முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஜி. ராஜன் நன்றி கூறினார்.

சக்கர வியூகம் செய்திகளுக்காக D.P. சரவணன்

Scroll to Top