பெண்களை காப்போம் – திசையன்விளை மனோ கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
- திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் சமூக நலத்துறை & மகளிர் உரிமைத் துறை மற்றும் நாட்டு நலப்பணி (NSS) இணைந்து “பெண் குழந்தையை பாதுகாப்போம் – பெண் குழந்தைக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- கல்லூரி முதல்வர் முனைவர் டி. லில்லி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அதிகாரிகள் மேரி செல்வம் மற்றும் பிரேம் ஜெயஸ்ரீ அவர்கள் கலந்து கொண்டு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.
- மகிழ்ச்சி மக்கள் கலைக்குழுவினர் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், வாடிப்பட்டி போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் சு. பலவேச கிருஷ்ணன் அவர்கள் செய்திருந்தார்.
- நன்றி உரையை வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் சண்முகம் அவர்கள் வழங்கினார்.
- நிகழ்ச்சியில் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
சக்கர வியூகம்
செய்திகளுக்காக
D.P. சரவணன்
