இணையத்தில் உலா !
- அப்பாவின் உதவியுடன் சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்தார். கேப்டனுடன் சேர்ந்து நடித்து வெகுஜன மக்களிடம் போய் சேர்ந்தார். அதன் பிறகு கேப்டனை மறந்து அண்ணாமலை தம்பி என்று சொல்லி, தன்னுடைய வளர்ச்சிக்கு சூப்பர்ஸ்டாரை பயன்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் அவரையே எதிரி ஆக்கி ஆள் வைத்து அடித்தார். அதன் பிறகு எம் ஜி ஆரை பிடித்துக் கொண்டார்.
- சினிமாவிலும் ரீமேக் வெற்றிகள் தான் விஜயை உயர்த்தியது. விஜயுடைய ஸ்டைல், மேனரிசம் எல்லாமே காப்பி தான். அவருடைய படங்கள், பாடல்கள், சண்டைக்காட்சிகள் அனைத்துமே ஏதோ ஒரு படத்தில் இருந்து உருவபட்டவை தான்.
- அவரது படங்களின் வெற்றிக் கணக்காவது உண்மையா என்றால், அதுவும் பொய் தான். வசூல் விபரங்களில் உள்ளடி வேலை பார்த்து தன்னைத் தானே நம்பர் 1 என்று சொல்லிக் கொண்டார். சூப்பர் ஸ்டார் பட்டத்தை அபகரிக்கப் பார்த்தார்.
- அரசியலுக்கு வந்த போதும் சொந்தக் கொள்கை எதுவும் இல்லாமல், எந்த வித புரிதலுமின்றி திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் எடுத்துக் கொண்டார். பெரும் தலைவர்களை எல்லாம் சாதி அடையாளங்களாக மாற்றி கொள்கை தலைவர்கள் என்றார்.
- அவர் பேசும் அரசியலாவது ஒரிஜினலா என்றால் அதுவும் இல்லை. பாஜக மீது திமுக வைக்கும் குற்றச்சாட்டை அப்படியே எடுத்துக் கொண்டார். பாஜகவுடன் பிரிந்திருந்த போது, திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணி என்ற அதிமுகவின் விமர்சனத்தை அப்படியே எடுத்துக் கொண்டார். அதையே எல்லா மேடைகளிலும் பேசுகிறார். திமுகவின் கருத்தை மாற்றிப் பேச தைரியம் இல்லை.
- மேடைப்பேச்சையும் சினிமா வசனங்களைப் போலவே பேசுகிறார். 1960, 70 களில் அடுக்கு மொழி வசனம் பேசி மக்களை ஏமாற்றியதைப் போல, 2025-ல் அடுக்கு மொழியில் பேசுகிறார். பேசுவது எதுவுமே சொந்தக்கருத்து கிடையாது.
- முழுநேர அரசியலுக்கு அண்ணா, எம் ஜி ஆர், கேப்டனை திருடிக் கொண்டு விட்டார்.
- ஆக மொத்தம் எதுவுமே சொந்தம் இல்லை. எதுவுமே ஒரிஜினல் இல்லை. சொந்த உழைப்பால் எதையும் சாதிக்கவில்லை.
- அரசியல் வெற்றிக்கும் வியூக வகுப்பாளர்களை மட்டுமே நம்பி இருக்கிறார்.
- வெற்றிக்காக எதையும் செய்யும் சந்தர்ப்பவாதியாகத் தான் விஜய் இருந்திருக்கிறார். இனிமேலும் இருக்கப் போகிறார்.
இப்படி ஒரு மனிதர் தான் இன்று உண்மை, நேர்மை என்று பேசுகிறார். அதை ஒரு மாபெரும் கூட்டம் நம்புகிறது.
தீமைகளுக்கும், போலிகளுக்கும் தான் இன்று காலம்.
நாம் வேடிக்கை பார்ப்போம்.