இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உரிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆண்டிற்கு பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு தேர்தல்களில் கூட போட்டியிடாத அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிகப்பட்டாத அரசியல் கட்சிகளாக தொடர தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு
வந்துள்ளது. எனவே, நாடு முழுவதும் இத்தகையை கட்சிகளை அடையாளம் காணும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. எந்த கட்சியும் தேவையில்லாமல் பட்டியலிருந்து நீக்கம் செய்யக்கூடாது என்பதற்காக அந்த கட்சிகளுக்கு காரணம் கூற நோட்டீஸ் (Show
cause notice) அனுப்பிடுமாறு உத்தரவிடப் பட்டுள்ளது. அதன்பின் அவை தலைமை தேர்தல் அதிகாரிகளால் நடத்தப்படும் விசாரணையின் வாயிலாக அவற்றிற்கு விளக்கம்
தரும் வாய்ப்பு அளிக்கப்படும். எந்தவோரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்குவது தொடர்பான இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும்.
அதன்படி 2019-ம் ஆண்டிலிருந்து அதாவது கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறியுள்ள கட்சிகளின் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த “அனைத்திந்திய மக்கள் நல்வாழ்வு கட்சி” மற்றும் ”தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம்” (“All India Makkal Nalvalvu Katchi” and “Tamilaga Makkal Dravida Munetra Kazagam) ஆகியவை இடம்
பெற்றுள்ளது. மேற்படி கட்சிகளின் தரப்பு விளக்கத்தினை அளிப்பதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக வருகின்ற 26.08.2025-க்குள் தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலர், பொது (தேர்தல்கள்) துறை, தலைமைச் செயலகம், சென்னை- 600 009 அவர்களுக்கு உரிய ஆவணங்களுடன் எழுத்துப் பூர்வமான விளக்கத்தினை அளிக்கவேண்டும். மேலும், இது தொடர்பாக மேற்படி கட்சிகளின் தலைவர் / செயலாளர் ஆகியோர்கள் 26.08.2025-க்குள் மேற்படி கட்சியின் தலைவர் / பொது செயலாளர் ஆகியோர் தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலர், பொது (தேர்தல்கள்) துறை, தலைமைச் செயலகம், சென்னை அவர்களின் விசாரணைக்கு கலந்து கொள்ள வேண்டும்.
மேலும், குறிப்பிட்ட நாளுக்குள் விசாரணைக்கு ஆஜராகாமலோ அல்லது உரிய பதில் ஏதும் வரப்பெறவில்லையென்றாலோ சொல்லிக்கொள்ள ஏதுமில்லையெனக்கருதி உரிய மேல் நடவடிக்கை மேல்நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது, என திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.